வங்கி கணக்கு துவக்குவதில் பெண்கள் அதிக ஆர்வம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி: நாட்டில் உள்ள 44 கோடி 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் 55 சதவீதம் பெண்களுடையது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் லோக்சபாவில் நேற்று கூறியதாவது: நாடு முழுதும் நவ., 17 வரை 43 கோடியே 90 லட்சம் பேர் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவக்கியுள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் பெண்கள். குஜராத் மாநிலத்தில்
JanDhan, Account Holders, Women, Finance Ministry, Lok Sabha, வங்கி கணக்கு, பெண்கள், ஆர்வம், ஜன்தன்

புதுடில்லி: நாட்டில் உள்ள 44 கோடி 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் 55 சதவீதம் பெண்களுடையது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் லோக்சபாவில் நேற்று கூறியதாவது: நாடு முழுதும் நவ., 17 வரை 43 கோடியே 90 லட்சம் பேர் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவக்கியுள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் பெண்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள 1 கோடியே 65 லட்சம் பேரில், 84 லட்சம் பெண்கள் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்காவது இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2014ல் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம் துவக்கப்பட்டது. இந்தக் கணக்குகளின் வாயிலாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsசுகன்யா சம்ரிதி கணக்கு

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: கடந்த 2018 ஏப்., முதல் 2021 அக்., வரை 1 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 910 சுகன்யா சம்ரிதி கணக்கு துவங்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் பெண் குழந்தை 10 வயதை அடையும் வரை ஒரு ஆண்டில் குறைந்த பட்சம் ரூ.250 முதல், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.கணக்கு துவக்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகள் நிறைவு அடைந்ததும் முதிர்ச்சியடைந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். கடந்த 2014ல் துவக்கபப்பட்ட இந்த திட்டத்தில், 9.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. தற்போது 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
07-டிச-202109:14:27 IST Report Abuse
RajanRajan சொடலைமாடன் விடியல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் இனாம் வாக்குறுதியை நம்பி இல்லத்தரசிகள் இப்போ வங்கி கணக்கு துவங்கியாச்சு. அடுத்து விடியல் மகளிரணி தலைமையில் களமிறங்கி போராடினால் தான் இந்த துட்டு கிட்டுமோ என்னவோ.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202108:55:58 IST Report Abuse
duruvasar பெண்கள் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி என்னவாயிற்று. தகுதிவாய்ந்தவர்களை கண்டறியும் பரிந்துரை வல்லுனர் குழுவும் தள்ளுபடியாகிவிட்டதா? மார்கழி மைந்தன் விவாதம் நடத்த வேண்டும்.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
07-டிச-202109:19:56 IST Report Abuse
RajanRajanவிடியல் மாடன் சாமி அதோட தேர்தல் வாக்குறுதியை அடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு ஒத்தி வச்சு அறிவாலயாம் தீர்மானம் இயற்றி விட்டது. இப்போ எல்லாத்துக்கும் இருட்டுக்கடை அல்வா தான்....
Rate this:
Gopalakrishnan Balasubramanian - Bangalore,இந்தியா
07-டிச-202111:48:01 IST Report Abuse
Gopalakrishnan Balasubramanianஇருட்டு k...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X