பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் தொடரும் மழை; தேயிலை குன்றையும் சூழ்ந்தது வெள்ளம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையால், சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இதே போல் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையும் தொடர்ந்து பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. உருளிக்கல், செலாளிப்பாறை, மாணிக்கா, பன்னிமேடு உள்ளிட்ட டீ

வால்பாறை: வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையால், சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இதே போல் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.



latest tamil news



இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையும் தொடர்ந்து பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. உருளிக்கல், செலாளிப்பாறை, மாணிக்கா, பன்னிமேடு உள்ளிட்ட டீ எஸ்டேட்களில், தேயிலை செடிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.


latest tamil news



தொழிலாளர்கள் கூறியதாவது:சோலையாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததும், இந்த நான்கு எஸ்டேட்களிலும் உள்ள குன்றுகளை, தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த குன்றுகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகளில், இலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த நான்கு மாதங்களாக, அங்கு சென்று தேயிலை பறிப்பதில்லை. மழை இடைவெளி விட்டு, சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்தால், குன்றுகளுக்கு செல்லும் வழித்தடம் தென்படும். அதன்பின், வழித்தடத்தை சுத்தப்படுத்தி, தேயிலை செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த பருவத்துக்கு தேயிலை துளிர்விடும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
07-டிச-202111:15:33 IST Report Abuse
raja கேடுகெட்ட இந்த விடியாத ஆட்சியில் மலை தொடர்களிலும் வெள்ளம்... கேக்கவே நாராசமா இருக்கு துப்புக்கெட்டவனுவோ நிர்வாகத்தில்....
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
07-டிச-202112:30:04 IST Report Abuse
Sathish பஞ்சம்பிழைக்க வேறு நாட்டுக்கு போயி பொழப்பு நடத்துற நமக்கு எதுக்கு இந்த வீராப்பு? தைரியம் இருந்தா இதை ஆட்சியாளர்களிடம் நேரடியா கேட்கலாமே நீங்க....
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
07-டிச-202116:46:13 IST Report Abuse
Sidhaarthதி மு க ஆட்சிதான் காரணம்பாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X