வால்பாறை: வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையால், சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இதே போல் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையும் தொடர்ந்து பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. உருளிக்கல், செலாளிப்பாறை, மாணிக்கா, பன்னிமேடு உள்ளிட்ட டீ எஸ்டேட்களில், தேயிலை செடிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.![]()
|
![]()
|
தொழிலாளர்கள் கூறியதாவது:சோலையாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததும், இந்த நான்கு எஸ்டேட்களிலும் உள்ள குன்றுகளை, தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த குன்றுகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகளில், இலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த நான்கு மாதங்களாக, அங்கு சென்று தேயிலை பறிப்பதில்லை. மழை இடைவெளி விட்டு, சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்தால், குன்றுகளுக்கு செல்லும் வழித்தடம் தென்படும். அதன்பின், வழித்தடத்தை சுத்தப்படுத்தி, தேயிலை செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த பருவத்துக்கு தேயிலை துளிர்விடும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement