பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அருங்காட்சியக பணி மந்தம்: டிசம்பரில் திறக்க வாய்ப்பில்லை!

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகப் பணிகள் மந்தகதியில் நடப்பதால், திட்டமிட்ட படி டிசம்பரில் திறக்க வாய்ப்பில்லை. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 11.3 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆறு கட்டடங்களுடன் கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்டில் கட்டடப்பணிகளை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகப் பணிகள் மந்தகதியில் நடப்பதால், திட்டமிட்ட படி டிசம்பரில் திறக்க வாய்ப்பில்லை.



latest tamil news



கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 11.3 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆறு கட்டடங்களுடன் கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்டில் கட்டடப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அமைச்சர்கள் டிசம்பருக்குள் பணிகள் முடிவடைந்து அருங்காட்சியகம் திறக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.


latest tamil news



ஆனால் சுற்றுச்சுவர், கட்டடங்கள், உட்புற வேலைப்பாடுகள், கதவுகள் உள்ளிட்ட எந்த பணிகளும் முழுமை பெறவில்லை. ஆறு கட்டட தொகுப்புகள் என கூறப்பட்டிருந்த நிலையில் கட்டடங்களுக்கு இடையே நடைபாதை உள்ளிட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. எனவே டிசம்பருக்குள் முடிவடைய வாய்ப்பே இல்லை. தினசரி கீழடி அகழாய்வு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் பொருட்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பணிகளை விரைவு படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-202120:21:46 IST Report Abuse
kulandai kannan 1977ல் ஜனதா கட்சி அரசு டெல்லியில் time capsule தோண்டியெடுத்து புஸ்வாணமானது ஞாபகம் வருகிறது.
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
07-டிச-202113:38:41 IST Report Abuse
செல்வம் டேய் போயி மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் தோண்டுங்கள் அங்கே 50 ஆயிரம் வருடம் பழமையான கல்லு கிடைக்கும். இந்தப் பணத்தை வச்சு ஒரு ஃபேக்டரி ஆரம்பிச்சு 100 150 பேருக்கு வேலை கொடுக்கலாம். கீழடியில் இன்னும் நல்லா தூக்குங்க ஓன்னு அடிச்சு இரண்டு தொங்கும்😁😁😁😁
Rate this:
Cancel
07-டிச-202111:23:54 IST Report Abuse
ஆரூர் ரங் இதிலாவது திருவள்ளூவர் ஒரு😅 அறிவுக் குளியல்,(ஞானஸ்நானம்) பெற்ற கிறிஸ்துவர் என்பதற்கு ஆதாரம் கிடைக்குமா🤑 திருமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X