பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டுக்குப் பின் முதல் கூட்டம்: தட்டிக்கழித்தது சேலம் கோட்டம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021
Share
Advertisement
ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்கழு கூட்டம் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், சேலம் கோட்ட ரயில்வே முதல் முறையாக நடத்தப்படுவதாக அறிவித்த கூட்டம் மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதி களை மேம்படுத்தும் பொருட்டு, கோட்ட வாரியாக ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த 2020 ல் இக்குழுவிற்கு புதிய
முதல் கூட்டம்,  தட்டிக்கழித்தது, சேலம் கோட்டம்,

ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்கழு கூட்டம் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், சேலம் கோட்ட ரயில்வே முதல் முறையாக நடத்தப்படுவதாக அறிவித்த கூட்டம் மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதி களை மேம்படுத்தும் பொருட்டு, கோட்ட வாரியாக ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த 2020 ல் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப் பட்ட பின் ஒரு கூட்டமும் நடத்தப்படவில்லை. குழு அமைக்கப்பட்ட மூன்று மாதங்களாக கூட்டம் நடத்தாத நிலையில், 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று துவங்கி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் ரயில்களே இயக்கப் படவில்லை.

இந்நிலையில், உறுப்பினர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்து வந்த காரணத்தால், வரும் டிச.,10 ல் சேலத்தில் ரயில்வே பயனாளிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குழுவிற்கு புதிய உறுப் பினர்கள் நியமிக்கப்பட்ட பின், பதவிக்காலமே முடியும்நிலையில் முதல் கூட்டம் நடத்தப்படவிருந்தது.

இந்நிலையில், வரும் 10ல் நடக்கவிருந்த கூட்டம், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தள்ளி வைக்கப் படுவதாக நேற்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி, ரயில்வே ஆர்வலர் களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்ட பயனாளிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் இரண்டு பெரிய பாலங்கள் கட்டப்படுவதால், பஸ்சில் கோவை செல்ல இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகிறது. கோவையில் பணி செய்யும் பெண்கள் மிகவும் தாமதமாக வீடு திரும்ப வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், ரயிலை இயக்கினால் மக்கள் பெரிதும் பயனடைவர். இந்த கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்த நினைத்திருந்த நிலையில் இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப் பட்டிருப்பது, அதிருப்தியளிக்கிறது. ஆன்லைன் கூட்டத்தையாவது இவர்கள் நடத்தியிருக்க வேண்டும்!'' என்றார்.


latest tamil news




சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸிடம் கேட்ட போது, ''கொரோனா கார ணமாகத்தான் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் சரியான பின், இக்கூட்டம் நடத்தப்படும். அல்லது ஆன்லைன் மூலமாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்!'' என்றார்.

கோவை மாவட்ட எம்.பி.,க்கள் களமிறங்கிப் போராடாதவரை, சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை மக்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற முன் வரமாட்டார்கள் என்பதுதான், கோவை தொழில், வர்த்தக மற்றும் சமூக அமைப்பினரின் ஒருமித்த கருத்தாகவுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X