பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரானால் பிப்ரவரியில் 3வது அலை; குறைவான பாதிப்பே இருக்கும் என கணிப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 3வது அலை ஏற்படலாம் என்றும், இரண்டாவது அலையைவிட குறைவான பாதிப்பாகவே இருக்கும் எனவும் ஐ.ஐ.டி பேராசிரியர் மனிந்தர அகர்வால் கணித்து கூறியுள்ளார்.இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும்
Third Wave, Hit, India, February, COVID-19, IIT Scientist, Warns, Omicron, Fears, ஒமைக்ரான், பிப்ரவரி, மூன்றாவது அலை, பாதிப்பு, குறைவு, ஐஐடி, பேராசிரியர், கணிப்பு

புதுடில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 3வது அலை ஏற்படலாம் என்றும், இரண்டாவது அலையைவிட குறைவான பாதிப்பாகவே இருக்கும் எனவும் ஐ.ஐ.டி பேராசிரியர் மனிந்தர அகர்வால் கணித்து கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐ.ஐ.டி பேராசிரியர் மனிந்தர அகர்வால் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒமைக்ரான் வைரசால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3வது அலை ஏற்படலாம். ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும்.


latest tamil news


பிப்ரவரி மாதம் ஒமைக்கரான் வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொண்டு இந்த புள்ளி விபரத்தை தெரிவிக்கிறேன். டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைபிடித்தால் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்டா வகை கொரோனா பரவிய சமயத்தில் 3வது அலை குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியதால், டெல்டாவால் 3வது அலை உருவாகுவது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரானால் 3வது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
07-டிச-202120:22:34 IST Report Abuse
Tamilan இதை வைத்து சந்தை உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையடிக்க பொருளாதார கொள்ளையர்கள் செய்யும் சூழ்ச்சிதான் இது . ஒருவகையில் நல்லது . கூட்டி கூறிவிட்டாள் ஏராவிட்டாலும் இவர்களே ஏற்றி எழுதி பீதியை கிளம்புவார்கள் அல்லது உலகளாவிய ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து வேண்டுமென்றே பரப்பி விடுவார்கள் . அரசை ஏமாற்றுவார்கள் .
Rate this:
Cancel
07-டிச-202110:49:44 IST Report Abuse
அப்புசாமி சுத்த திருக்கணிதபஞ்சாங்கத்தை வைத்து கணிக்கிறாங்க.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
07-டிச-202119:12:13 IST Report Abuse
elakkumananஒரு சிலைக்கு வணக்கம், மரியாதை, மாலையும் போட்டுட்டு, இன்னொரு சிலையை வெறும் கல்லுன்னு கண்டுபிடிச்சு சொல்லும் இருபதும் அறுபதும் கல்யாண வைபோக மற்றும் காட்டுமிராண்டி பாஷை கண்டுபிடிப்பாளர் மற்றும் ஈர வெங்காய மொத்த விற்பனையாளரின் ரெப்பரண்டிவ் தம்பி சாமி............. சொந்தமா பெயரை சொல்ல கூட முடியாத மரியாதையான யோக்கியமான பிழைப்பு....ஈனமான கோஷ்டி....அப்போ, யோக்கியமும் இருக்குமே..... இருக்கட்டும்.......
Rate this:
Cancel
07-டிச-202110:49:17 IST Report Abuse
அப்புசாமி சுத்த திருக்ஜணி பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கிறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X