சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனக்கு தானே பிரசவம்: குழந்தை இறந்த சோகம்; கோவையில் தாய் மீது போலீசார் வழக்கு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை : கோவை, செட்டி வீதியில், பெண் ஒருவர் தனக்குதானே வீட்டில் பிரசவம் பார்த்து கொண்டதில், ஆண் குழந்தை இறந்தது. இதனையடுத்து, அந்த தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை செட்டி வீதி அருகே, உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், 38. மனைவி புண்ணியவதி, 32. தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமான இவருக்கு, பிரசவ வலி
தனக்கு தானே பிரசவம்,  குழந்தை, இறந்த சோகம், தாய், கோவை, போலீசார், வழக்குப்பதிவு,

கோவை : கோவை, செட்டி வீதியில், பெண் ஒருவர் தனக்குதானே வீட்டில் பிரசவம் பார்த்து கொண்டதில், ஆண் குழந்தை இறந்தது. இதனையடுத்து, அந்த தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை செட்டி வீதி அருகே, உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், 38. மனைவி புண்ணியவதி, 32. தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமான இவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டதால், தனக்குத்தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையும் தாயும் மயங்கியுள்ளனர்.


latest tamil news




இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெரியகடைவீதி போலீசார், புண்ணியவதி மீது (இந்திய தண்டனைச் சட்டம் 315) வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07-டிச-202120:11:42 IST Report Abuse
N Annamalai சோகம் .அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்னும் நம்பிக்கை கொடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறன் .
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
07-டிச-202119:39:52 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy என் ஆடு மாடுகளுக்கு பிரசவம் பார்க்க டாக்டரை கூப்பிடவில்லை. வழக்கு பாயுமா ?
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
07-டிச-202117:47:16 IST Report Abuse
Murthy அதுசரி....மருத்துவமனைகளில் குழந்தை இறந்தால் மருத்துவர்மீது வழக்கு போடா முடியுமா? இன்று மக்கள் பயப்படுகிறார்கள். பணத்திற்காக சுப பிரசவத்திற்கு முன்னுரிமை கொடுப்பது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X