ஜப்பானில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்திய பயணிகளுக்கு கெடுபிடி!

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
டோக்கியோ: வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக ஜப்பானியர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த 30 வயது நபர், அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு
Omegron, Japan, One Man, Attack, Harm, Indian Travelers, ஜப்பானில் ஒருவர், ஒமைக்ரான், பாதிப்பு, இந்தியா பயணிகள், கெடுபிடி,

டோக்கியோ: வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக ஜப்பானியர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த 30 வயது நபர், அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர், இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்ரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, கிரீஸ், ருமேனியா மற்றும் நான்கு அமெரிக்க மாநிலங்களில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்பவர்கள் கடுமையான தனிமைப்படுத்துதல் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொலராடோ, ஹவாய், மினசோட்டா மற்றும் நியூயார்க்கிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் ஜப்பானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்கள் கட்டாயமாக தங்க வேண்டும் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
07-டிச-202115:09:29 IST Report Abuse
Tamilan இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமிருந்து தான் உருவாகிறது . மிகவும் வீரியமிக்கதாக மாறிக்கொண்டே செல்கிறது .
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
07-டிச-202113:46:55 IST Report Abuse
தமிழன் ஆக மொத்தம் கடைசி வர, யாரும் இந்த புது வைரஸால் என்ன வகையான பாதிப்பு வரும்ன்னு சொல்லவே மாட்டேங்குறாங்க. வேகமா பரவும்னு மட்டும் தெரியுது. மத்த படி, இது எந்த அளவுக்கு நுரையீரலை பாதிக்கும்? வேற என்னென்ன பிரச்சனைகளை உண்டு பண்ணும்? இதுவரை இதனால் நடந்த மரணங்கள் எத்தனை?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-டிச-202111:51:05 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவும் இது போன்ற கெடுபிடிகளை வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் காட்டவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X