பொது செய்தி

தமிழ்நாடு

பிப்ரவரியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, மார்ச்சில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (2+ 1)
Share
Advertisement
சென்னை: 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பும், மார்ச்சில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியாகி 75 நாளில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை
TNPSC, Annual Planner, Group2, Gruop4, Exam, டிஎன்பிஎஸ்சி, திட்ட அறிக்கை, குரூப் 2, குரூப் 4, தேர்வுகள், அறிவிப்பு

சென்னை: 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பும், மார்ச்சில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியாகி 75 நாளில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.,07) வெளியிட்டார்.


டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அட்டவணை வெளியீடு

latest tamil newsபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2022ம் ஆண்டில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக 5,831 காலி பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும். 5,255 குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளிவரும். அறிவிப்பு வெளிவந்து அடுத்த 75 நாளில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் 'ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன்' முறையில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் எடுத்துவரும் வாகனங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
07-டிச-202116:18:11 IST Report Abuse
Raj //2022ம் ஆண்டில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். // இந்த பரீட்சை எல்லாம் கஷ்டமா இருக்கு பாஸ், ரத்து பண்ணா நல்லா இருக்கும்.
Rate this:
Cancel
Elaya - Salem,இந்தியா
07-டிச-202112:40:23 IST Report Abuse
Elaya Hi sir, plz refer singapore driving exam. You prepare some set of question. You know answer. If u conduct online exam immediate can get result immediate after exam. You can give score receipt in exam center and s thru registered email or msg. Then you can announce rank list.. what is issue.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X