பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளில் இருந்து மஹா.,விற்கு வந்த 100 பேர் ‛எஸ்கேப்'

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த வெளிநாடுகளில் இருந்து வந்த 295 பேரில் 100 பேர் மாயமாகி உள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கோவிட் வைரசான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால், இதுவரை இந்தியாவில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு உறுதி
Kalyan-Dombivali,foreign returnees, , KDMC,untraceable

மும்பை: மஹாராஷ்டிராவில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த வெளிநாடுகளில் இருந்து வந்த 295 பேரில் 100 பேர் மாயமாகி உள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கோவிட் வைரசான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால், இதுவரை இந்தியாவில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் - டோம்ப்விலி மாநகராட்சி பகுதிகளுக்குள் வந்த வெளிநாட்டில் இருந்து 295 பேரில் 100 பேரை காணவில்லை என அந்த மாநகராட் மேயர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அவர்கள் அளித்த மொபைல் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. முகவரியில் உள்ள வீடுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. அச்சுறுத்தல் மிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். 8 வது நாளில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகள் நெகட்டிவ் என வந்தாலும், அடுத்த 7 நாட்களுக்கு மீண்டும் தனிமைபடுத்தி கொள்வது கட்டாயம். அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றப்படுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
07-டிச-202118:48:17 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy ? மறுபடியுமா?
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-202115:14:36 IST Report Abuse
ஜெயந்தன் அடுத்த லாக் டவுன் க்கு அடி போடறானுங்க...ஏர் போர்ட் லேயே செக் பண்ணாம இப்படி விட்டுத்தான் கொரோனா பரவியது....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
07-டிச-202115:05:46 IST Report Abuse
Tamilan வெளிநாடுகளில் இருந்து புதிய கட்டுப்பாடுகளுக்கு பின் நாடு முழுவதும் லச்சம் பேர் வந்திருப்பார்கள் . அதில் வெறும் 27 பேரைத்தான் பிடிக்க முடிந்தது . மற்றவர்களில் எத்தனை பேர் தப்பித்தார்களோ. இந்த நடைமுறைக்கு முன் எதனை பேர் தப்பித்தார்களோ ?. 100 பேர் போய்விட்டால் என்ன ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X