பொது செய்தி

இந்தியா

இந்தியா எல்லையில் பிறந்த குழந்தைக்கு 'பார்டர்' என பெயர் சூட்டிய பாக்., தம்பதி

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அட்டாரி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் 'பார்டர்' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம்ராம்; இவரது மனைவி நிம்பு பாய் கர்ப்பமாக உள்ளார். பலம்ராம், நிம்புபாய் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை
IndiaPakistan, Border, Woman Delivers, Baby, Attari, Border Names, இந்தியா, பாகிஸ்தான், எல்லை, குழந்தை, பிறப்பு, பார்டர், பெயர் சூட்டல்

அட்டாரி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் 'பார்டர்' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம்ராம்; இவரது மனைவி நிம்பு பாய் கர்ப்பமாக உள்ளார். பலம்ராம், நிம்புபாய் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். புனித தலங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்பியுள்ளனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.


latest tamil news


இதனையடுத்து செய்வதறியாது தவித்த தம்பதி எல்லைக்கு அருகே இருந்த கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு, உடைகளை அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவியுள்ளனர். இந்நிலையில் கர்ப்பமான மனைவி நிம்புபாய்க்கு கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், அப்பகுதி கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து நிம்புபாய்க்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பிறந்ததால் 'பார்டர்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
07-டிச-202114:22:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்." ஹிந்து என்பதுதான் காரணம் ஆனால் மூர்க்கர்களை கூட்டம் கூட்டமாக இந்தியா அனுப்புவார்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
07-டிச-202112:22:34 IST Report Abuse
Anand கண்ட கண்ட கள்ளக்குடியேறிகள் இங்கு சட்டத்திற்கு புறம்பாக வாழும் போது, இந்தியாவில் வாழ சகல உரிமையுள்ள இந்த தம்பதிகள் ஏன் அப்படி கூடாரத்தில் அகதிகளாக வாழவேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X