கோவிட்டுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெனிவா: ‛‛கோவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை,'' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதை கோவிட்டால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு
Covid, plasma, treatment, Don't want World Health Organization, கோவிட், ப்ளாஸ்மா சிகிச்சை, தேவையில்லை உலக சுகாதார அமைப்பு, அறிவிப்பு

ஜெனிவா: ‛‛கோவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை,'' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதை கோவிட்டால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.


latest tamil news


ஆனால், இந்த சிகிச்சை முறையில் எந்தப் பயனும் இல்லை. இதனால், தீவிர பாதிப்பு கொண்டோர் குணமடைந்ததாகவோ, வென்டிலேட்டரின் தேவை குறைந்ததாகவோ அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை. எனவே, கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட கிளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே இவ்வகை சிகிச்சையை அளிக்கலாம்.

கோவிட் சிகிச்சைக்கு பிளாஸ்மாவை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் சிகிச்சையில், தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கோவிட் தொற்றாளர்கள் 16 ஆயிரத்து, 236 நபர்களிடம் நடத்தப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைந்ததாகவும், தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-202114:35:10 IST Report Abuse
Vittalanand நிஜமான, சாமுவேல் ஹானிமன் வழியில் ஹோமோப்பதி முறையில் பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X