எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து: மத்திய அமைச்சர்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரும் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.பி.,க்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறித்து விரிவாக விளக்கி உள்ளோம். பார்லிமென்டில் நடந்த நிகழ்வுகளை மக்கள்
ராஜ்யசபா எம்பி, மன்னிப்பு, சஸ்பெண்ட், ரத்து, மத்திய அமைச்சர்,

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரும் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.பி.,க்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறித்து விரிவாக விளக்கி உள்ளோம். பார்லிமென்டில் நடந்த நிகழ்வுகளை மக்கள் பார்த்துள்ளனர். இன்று அவர்கள் மன்னிப்பு கேட்டால் கூட, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


எம்பிக்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து

latest tamil news




பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், சஸ்பெண்ட்டை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே திரும்ப பெறப்படும் என மத்திய அரசும், அவைத்தலைவர் வெங்கையாநாயுடுவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:38:11 IST Report Abuse
J.V. Iyer இந்த எம்.பி.,க்கள் இருப்பதால் இந்தியாவுக்கு ஒரு நன்மையையும் இல்லை. தொல்லைதான்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07-டிச-202120:51:53 IST Report Abuse
Arul Narayanan இவர்கள் என்ன சிறு பிள்ளைகளா, தெரியாமல் தப்பு செய்து விட்டு மன்னிப்பு கேட்க? இவர்களை ஏன் கெஞ்ச வேண்டும்? பாராளுமன்ற விவகார அமைச்சருக்கும் துணை அதிபருக்கும் இதுதான் வேலையா?
Rate this:
Cancel
07-டிச-202119:38:13 IST Report Abuse
அப்புசாமி உச்சநீதி மன்றம்... கான்ஸ்ட்டிட்டியூஷன் பெஞ்ச் எல்லாம் இருக்குமே... எங்கே போனாங்க? ஆள்றவங்க விளக்கம், விவாதம் எதுவும் நடத்தாம வெறுப்பேத்துவாங்க. எதிர்க்கட்ட்சி ஆளுங்க காண்டாயிட்டா இவிங்க நல்லவங்க மாதிரி சஸ்பெண்ட் பண்ணுவாங்க. பேசாம ரெண்டு பார்ட்டியும் கோர்ட்டுக்கு போங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X