பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் கவர்னர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விஷயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில்
SC, Perarivalan, Governor, Supreme Court, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், பேரறிவாளன், கவர்னர், காலம் தாழ்த்தி, தீர்மானம்

புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் கவர்னர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விஷயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2018ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு கனர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.


latest tamil news


பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான கவர்னரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் கவர்னர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று (டிச.,7) நடைபெற்ற விசாரணையின்போது, 'கவர்னர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் கவர்னர் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை,' என தமிழக அரசு வாதிட்டது.


latest tamil news


இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், 'பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்க முடியாத விஷயம். இந்த விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்,' என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-டிச-202109:47:19 IST Report Abuse
M S RAGHUNATHAN ஏன் உயர் நீதி மன்றமோ அல்லது உச்ச நீதி மன்றமோ தான் இச்சையாக ஒரு முடிவு எடுத்து அவர்களை விடுதலை செய்யக் கூடாது. நன்கு ஆராய்ந்து, விசாரித்து நீதி மன்றங்கள் கொடுத்த தீர்ப்பிற்கு எதிராக சட்ட சபைகள் எப்படி தீர்மானம் போடலாம். அதை எப்படி நீதி மன்றம் ஏற்கலாம். ஏற்கனவே, இவர்களுக்கு ஒரு முறை ரெமிஸ்ஸின் கொடுத்து ஆகிவிட்டது. மேலும் ஏன்? ராஜிவ் உடன் இறந்த மற்ற மனிதர்களுக்கு என்ன நிவாரணம்? படு காயம் அடைந்தவர்களுக்கு என்ன நியாயம்? ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் வாழ்வு முழுதும் கஷ்டப் படவேண்டி இருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம். அவர்களுக்கு ஏன் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை. இந்திய அரசு செய்த மாபெரும் தவறு இவர்களின் கருணை மனுவை ஏற்று remission கொடுத்தது.
Rate this:
Cancel
Sukumar R -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202109:09:36 IST Report Abuse
Sukumar R டிவிகாரங்க விவாதம் நடத்தி விளம்பரத்துல நாலு காசு பார்க்கறதுக்கு தலைப்பு கொடுக்கறதுன்னே சிலது நடக்குது
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
08-டிச-202107:58:15 IST Report Abuse
Ram தேவையில்லாத கேஸை நடத்துவதை நீதிமன்றங்கள் நிறுத்தவேண்டும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X