பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டையை நாளை மிரட்டுது மழை

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் நாளை (டிச.,8) கடலுார், ராமநாபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்,'' என்று, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இன்று டிச., 7 ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்
Heavy Rain, Meteorological Center, Announcement, 3 Districts, Tamil Nadu, Tomorrow, தமிழகம், நாளை, 3 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு மையம், தகவல்

சென்னை: ‛‛தமிழகத்தில் நாளை (டிச.,8) கடலுார், ராமநாபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்,'' என்று, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news


இன்று டிச., 7 ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக நாளை 8 ம் தேதி: கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


டிச.,9ம் தேதி: அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.,10 மற்றும் 11ம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

ஆயிக்குடி (தென்காசி) 10 செ.மீ., பெரியாறு (தேனி) 8 செ.மீ., செங்கோட்டை, தென்காசி, விராலிமலை (புதுக்கோட்டை), மோகனுார் (நாமக்கல்) தலா 5 செ.மீ., சாத்துார் (விருதுநகர்), பாலக்கோடு (தர்மபுரி), மீமிசல் புதுக்கோட்டை) தலா 4 செ.மீ., அன்னவாசல், ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), பென்னாகரம் (தர்மபுரி), மருங்காபுரி (திருச்சி), ஒகேனக்கல் (தர்மபுரி), தேக்கடி (தேனி), ஒசூர் (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை), பூதபாண்டி (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-டிச-202101:19:48 IST Report Abuse
DARMHAR வருண பகவானுக்கு என்ன கோபமோ தெரியவில்லை இவ்வாறு அதீத மழையை பொழிவதற்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X