இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை: லோக்சபாவில் ராகுல் கோரிக்கை

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் மற்றும் மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு செய்துவிட்டதாக ஒப்பு
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் மற்றும் மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு செய்துவிட்டதாக ஒப்பு கொண்டுள்ளார். கடந்த 30ம் தேதி, போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் இறந்தனர் என்ற கேள்விக்கு, எங்களிடம் எந்த தகவலிடம் இல்லை என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




ஆனால், 400 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் பஞ்சாப் அரசு இழப்பீடு வழங்கிய தகவல் எங்களிடம் உள்ளது. மேலும் 152 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை பட்டியல் என்னிடம் உள்ளது. ஹரியானாவில் உயிரிழந்த 70 விவசாயிகள் பட்டியலையும் வெளியிட்டு உள்ளோம். விவசாயிகளுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்கப்பட வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுடன் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:35:15 IST Report Abuse
J.V. Iyer முந்தயஇரவு நன்றாக கூத்தடித்துவிட்டு பாப்பு பாதிநேரம் லோக்சபாவில் தூக்கம். வீடியோ எடுத்து மானத்தை வாங்குகிறார்கள். பிறகு இப்படி. நேருவின் மீது மக்கள் இப்போது கோபம் கொள்வதற்கு சோனியா வின்சி குடும்பத்தின் பங்களிப்பு மகத்தானது. ராகுல் வாழ்க.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
07-டிச-202122:36:54 IST Report Abuse
Mohan இறந்தவர் எங்கே என்ன விவசாயம் செய்தார் அதற்கான பட்டா சிட்டா அடங்கல் எல்லாம் காண்பித்து பணம் வாங்கிக்கோ. ரோட்டில ஓடுற வண்டி முன்னால விழுந்துட்டு காசு கொடு காசு கொடுன்னு கூவுற. வடிவேலு கணக்கா.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
07-டிச-202120:39:37 IST Report Abuse
a natanasabapathy பப்புவுக்கு மண்டை காய்ந்து விட்டது .கொழுப்பெடுத்து தற்கொலை செய்து கொள்பவனுக்கு எல்லாம் உமது பாட்டனார் சொத்தில் இருந்து வாரி வழங்கும் .அரசு கொடுக்க தேவை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X