பொது செய்தி

தமிழ்நாடு

முந்நூறை தாண்டியது முருங்கை; கதற வைக்குது கத்தரி; தவிக்க வைக்குது தக்காளி

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் பருவமழையால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முருங்கை கிலோ ரூ.300ஐ தாண்டியும், கத்தரி, தக்காளி விலை ரூ.100ஐ தாண்டியும் விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள்
Drumstick, Tomato, Brinjal, Price Hike, முருங்கை, கத்தரி, தக்காளி, விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் பருவமழையால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முருங்கை கிலோ ரூ.300ஐ தாண்டியும், கத்தரி, தக்காளி விலை ரூ.100ஐ தாண்டியும் விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு சென்னையில் கிலோ தக்காளி மீண்டும் ரூ.110ஐ தொட்டது. அதேபோல், கத்தரிக்காய் விலையும் ரூ.100 முதல் ரூ.110க்கு விற்பனையாகிறது. மழையால் முருங்கைக்காயின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கை விலை ரூ.330 என்ற அளவில் விற்கப்படுகிறது.


latest tamil news


காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். ஹோட்டல்களிலும் முடிந்தளவு இந்த காய்கறிகளை தவிர்த்து வருகின்றனர். பல ஹோட்டல்களில் தக்காளி சாதத்தை நிறுத்திவிட்டு லெமன் சாதத்திற்கு மாறிவிட்டனர். கத்தரிக்காய் கூட்டு வைப்பதையும் 'கத்தரித்து' விட்டனர்.
‛‛விலை உயர்ந்த கத்தரி, தக்காளி, முருங்கை விலையில் இருந்து தப்பிக்க விலை குறைந்த கீரை வகைகள், சுரைக்காய், புடலங்காய், நூக்கல், பீர்கங்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை வாங்கி சமைக்கலாம்'' என ஒரு இல்லத்தரசி யோசனை கூறினார்..

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-டிச-202105:57:57 IST Report Abuse
Natarajan Ramanathan அக்கிரமராசா போன்ற கொள்ளை அடிக்கும் கும்பல் தலைவர்கள் விடியல் கட்சிக்கு கொடுத்த நிதியை திரும்ப வசூலிக்க நாம் கொடுக்கும் விலை....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:31:41 IST Report Abuse
J.V. Iyer முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்கவேண்டும். மிகவும் எளிது.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
08-டிச-202103:56:05 IST Report Abuse
Sankar Ramu எங்கடா நம்ப அதிகம் படிச்ச டக்லஸ் அமைச்சர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X