‛‛இதுக்கெல்லாமா இயந்திரம்'': வலியில்லாமல் தற்கொலை செய்துகொண்டு சாக உதவும் 'தற்கொலை இயந்திரம்'; சுவிட்சர்லாந்து அனுமதி

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
பெர்ன்: தற்கொலை செய்துகொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இந்த 3டி பிரிண்டட் இயந்திரத்தை
Switzerland, Approves, Suicide Capsule, Sarco Capsule, சுவிட்சர்லாந்து, தற்கொலை இயந்திரம், சார்கோ கேப்சூல், அனுமதி

பெர்ன்: தற்கொலை செய்துகொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இந்த 3டி பிரிண்டட் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சவப்பெட்டிப் போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

latest tamil news

தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக்கொள்ள வேண்டுமாம். அவர்களிடம் அந்த இயந்திரம் கேட்கும் இரு கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, அதிலிருக்கும் பட்டனை அழுத்த வேண்டுமாம். அவ்வளவு தான் சில நொடிகளில் வலியே இல்லாமல் தற்கொலை செய்துக்கொள்ளலாம். அதாவது, பட்டனை அழுத்தியதும் இயந்திரமானது உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்புகிறது, ஆக்ஸிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. உள்ளிருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவர். இதெல்லாம் 30 வினாடிகளில் நடந்தேற அடுத்த 5 நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுகிறது.

latest tamil news

எந்தவித அச்சமும் இல்லாமல், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை நிகழ்த்துகிறது. இந்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அங்கு 1,300 பேர் தற்கொலை செய்துக்கொண்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. தற்கொலைக்கு இயந்திரம் கண்டுபிடித்து அதற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதியும் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-202108:00:10 IST Report Abuse
Lion Drsekar நாம ஊரில் இருப்பவர்கள் அங்கு பல லட்சம் கோடி வைத்திருப்பதாக கூறுகிறார்களே இந்த இயந்திரம் அவர்களுக்கு ,,> இதே போன்று நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தினால் நல்லவர்கள் அனைவரும் இந்த சவப்பெட்டியை வாங்குவார்கள் . சமூக விரோதிகளுக்கு கவலையே இருக்காது அவர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொள்வார்கள், கட்சிகளும் அவர்களுக்குள்ளே அடித்துக்கொள்வார்கள், நல்லவர்கள் நிம்மதியாக போய்சேர்ந்துவிடுவார்கள் , இருந்து அணு அணுவாக சாவதை விட சாவதே மேல் என்று , இன்று எங்குபார்த்தாலும் இளைஞர்களும் கூறும் அளவுக்கு பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, எங்கும் யாருக்கும் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது என்று குமுறும் நல்லவர்களுக்கு சோதனையான காலத்தில் வெளிநாட்டில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு,. வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் இருந்து என்ன பயன் லஞ்சமும் வரியும் கட்டுவதற்கு என் வாழ்வை தியாக செய்யவேண்டிய ஒரு நிலை என்றும் புலம்புவது , இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்கள் ... இந்த மரணப்பெட்டியை உபயோகப்படுத்தாமல் செய்வது ஆள்பவர்கள் கைகளில் இருக்கிறது, எல்லோருமே வாழப்பிறந்தவர்கள் என்ற நோக்கில் செயல்பட்டு அனைவரையும் தன் குடும்பமாக நடத்தினால் போதும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-202107:58:28 IST Report Abuse

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-டிச-202105:55:21 IST Report Abuse
Natarajan Ramanathan நல்ல விஷயம்தான்...ஒவ்வொருவரின் விருப்பம் வலியில்லாத மரணம் தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X