பொது செய்தி

இந்தியா

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்: வலுக்கும் எதிர்ப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கொஹிமா: நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக கருதி பொது மக்கள் 14 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) கண்டிப்பாக நீக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளார்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஞாயிறன்று
Armed Forces Special Powers, Act, Nagaland, Opposition, Strengthening, நாகாலாந்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், வலுக்கும் எதிர்ப்பு,

கொஹிமா: நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக கருதி பொது மக்கள் 14 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) கண்டிப்பாக நீக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளார்.


latest tamil news


வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஞாயிறன்று அதிகாலை ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவு மான் மாவட்டம் ஒடிங்க் கிராமத்தில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சுரங்கத் தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் 6 பேர் பலியாகினர். தகவலறிந்து கிராம மக்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தற்காப்புக்காக சுட்டதில் மேலும் 8 பேர் இறந்தனர். ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். தொழிலாளர்கள் வந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டதாகவும், நிற்காமல் தப்பி செல்ல முயன்றதால், பயங்கரவாதிகளை ஏற்றிச் செல்லும் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.


latest tamil news


நாகாலாந்து முதல்வர் நெய்ப்பு ரியோ கட்சி, பா.ஜ., உடன் கூட்டணியில் இருப்பதால் அவருக்கு இது மேலும் நெருக்கடி ஆகியிருக்கிறது. 1958 முதல் வடகிழக்கு மாநிலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது.

சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை வாரன்ட் இன்றி கைது செய்யலாம். அனுமதியின்றி சோதனை செய்யலாம். துப்பாக்கிச் சூடு நடத்தலாம் போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது. தற்போது பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இச்சட்டத்தை கண்டிப்பாக நீக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக நாகாலாந்து அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
08-டிச-202110:41:24 IST Report Abuse
Raja தங்களுக்கு கிடைக்கும் தகவலின் நம்பகத்தன்மையை ஆராயாமல் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுப்பது ராணுவத்திற்கு ஏற்புடையதில்லை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-202120:34:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தொழிலாளர்கள் வந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டதாகவும், நிற்காமல் தப்பி செல்ல முயன்றதால், பயங்கரவாதிகளை ஏற்றிச் செல்லும் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். அதாவது, தொழிலாளர்கள் தான், இவங்க சுட்டு கொன்னவங்க மட்டும் பயங்கரவாதிங்க. அப்டித்தானே?
Rate this:
Cancel
07-டிச-202118:47:34 IST Report Abuse
SUBBU, MADURAI இன்னும் ஒரு ஏழெட்டு பேரையாவது போட்டுத் தள்ளினால்தான் அவன்களுக்கு பயம் வரும்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
08-டிச-202110:32:15 IST Report Abuse
Rajaஅந்த ஏழெட்டு பேருல நீங்களும் உங்க குடும்பமும் சேர தயாரா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X