மணிப்பூரில் ரூ.500 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021
Share
Advertisement
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஒரு வீட்டில் துணை ராணுவுப்படையினர் சோதனை நடத்தியதில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.மணிப்பூர் மாநிலம் மோரே என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் மிக அதிக அளவில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படைப்பிரிவினர் சோதனை
Rs500 Crore, Drug, Seized, Manipur, மணிப்பூர், ரூ.500 கோடி, போதைப்பொருள், பறிமுதல்,

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஒரு வீட்டில் துணை ராணுவுப்படையினர் சோதனை நடத்தியதில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil news



மணிப்பூர் மாநிலம் மோரே என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் மிக அதிக அளவில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படைப்பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் என்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் சிக்கிய வீட்டின் உரிமையாளர் மியான்மரில் இருப்பதாகவும் அவரது கணவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் தங்கள் பொருட்களை விற்பதற்கு வடகிழக்கு மாநிலங்களை ஒரு மையமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பறிமுதல் செய்த வீட்டின் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X