வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
துபாய்: வார வேலை நாட்களை 4.5 நாட்களாக மாற்றியுள்ள ஐக்கிய அரபு எமீரேட்ஸ், வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாகவும் மாற்றி உள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், வரும் ஜனவரி முதல் வாரத்தில் 4.5 நாட்கள் வேலை என்பதை அனைத்து அரசு அலுவலகங்களும் அமல்படுத்துவது கட்டாயம் ஆகும். வேலை - வாழ்க்கை இடையே உள்ள இடைவெளி மற்றும்
வேலைநாட்கள், விடுமுறை, யுஏஇ,

துபாய்: வார வேலை நாட்களை 4.5 நாட்களாக மாற்றியுள்ள ஐக்கிய அரபு எமீரேட்ஸ், வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாகவும் மாற்றி உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், வரும் ஜனவரி முதல் வாரத்தில் 4.5 நாட்கள் வேலை என்பதை அனைத்து அரசு அலுவலகங்களும் அமல்படுத்துவது கட்டாயம் ஆகும். வேலை - வாழ்க்கை இடையே உள்ள இடைவெளி மற்றும் பொருளாதார போட்டி ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. உலகளவில் வார வேலை நாட்கள் 5 நாட்களாக இருக்கும் நிலையில், அதற்கும் குறைவாக வேலை நாட்கள் உள்ள வாரத்தை ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முதல்முறையாக அமல்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் அங்கு வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்று கிழமையாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, வார விடுமுறை வெள்ளி பிற்பகல் துவங்குகிறது. வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் தான், வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202106:04:33 IST Report Abuse
Kasimani Baskaran பொய்த்தகவல் என்று சொல்லப்படுகிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:29:47 IST Report Abuse
J.V. Iyer குடும்பத்தோடு பொழுதைக்கழித்தால் நல்லது. வரவேற்கப்பட வேண்டியது..
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
07-டிச-202123:00:45 IST Report Abuse
தத்வமசி கனவு தான். வாரத்திற்கு நாலரை நாட்கள் வேலை செய்தால் நாடு திவாலாகும். அது மாதிரி எந்த திட்டமும் இல்லை என்று அரசு கூறி விட்டதாம். எல்லோரும் வீட்டுக்கு செல்லுங்கள். நேரமாகி விட்டது. உறங்கச் செல்லவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X