காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம்: கோவையில் வினோதம்| Dinamalar

காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம்: கோவையில் வினோதம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (16) | |
கோவை: கோவையில் காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்.இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 29ம் இவரது வளர்ப்பு பூனை காணமால் போனதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தும்
கோவை, பூனை, போஸ்டர்,

கோவை: கோவையில் காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்.இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 29ம் இவரது வளர்ப்பு பூனை காணமால் போனதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியுள்ளார்.


latest tamil news




அந்த போஸ்டரில் காணாமல் போன பூனை குறித்து தகவல் அளித்தாலோ அல்லது கண்டு பிடித்து கொடுத்தாலோ 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அச்சிடப்பட்டு உள்ளது. பூனைக்கு உதட்டில் மச்சம் இருக்குமாம். இது தான் பூனைக்கு அடையாளமாம். இதுவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X