பொது செய்தி

இந்தியா

ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் குறைந்தது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 2018 ல் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2018 மார்ச் 31ல் 336.3 கோடி (எண்ணிக்கையில்) ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது
2000 notes,  banknotes, circulation, down,


புதுடில்லி: கடந்த 2018 ல் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2018 மார்ச் 31ல் 336.3 கோடி (எண்ணிக்கையில்) ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது கடந்த 2021 நவ., 26 ல் 223.3 கோடி(எண்ணிக்கையில்) ஆக குறைந்துள்ளது.


latest tamil news



இதற்கு, 2018 - 19 ம் ஆண்டிற்கு பிறகு புதிதாக நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படாததே முக்கிய காரணம். கிழிந்தது மற்றும் சேதமடைந்தது காரணமாகவும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து போனதற்கும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202104:56:19 IST Report Abuse
Bhaskaran எல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வியாதிகள் வீட்டில் பதுக்கி வச்சிருக்கு
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07-டிச-202121:50:01 IST Report Abuse
Vijay D Ratnam பதுங்குவதற்கு பெரிதும் பயன்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தி கொள்ளவேண்டும். அதற்கு மேல் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட வேண்டும். ரெய்டில் சிக்கும் பணம் பெரும்பகுதி இரண்டாயிரம் ரூபாய்தான். உழைத்து சம்பாதிக்கும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஊழலில் திளைக்கும் பல அரசியல்வியாதிகளுக்கு, லஞ்சத்தில் ஊரும் சில அரசு ஊழியர்களுக்கு, ஒட்டுமொத்த ஹவாலா பேர்வழிகளுக்கு, கள்ளக்கடத்தல் கும்பலுக்கு, போதை பொருள் மாஃபியாக்களுக்கு, கருப்புப்பண முதலைகளுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். நேர்மையாக உழைக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இரண்டாயிரம் ரூபாய் தேவையே இல்லை. அதிகபட்ச மதிப்பு கொண்ட பணமாக ஐநூறு ரூபாய் இருக்க வேண்டும். ஆன்லைன் டிரான்செக்ஷன் அதிகரிக்கும்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
07-டிச-202119:46:26 IST Report Abuse
amuthan புழக்கத்தில் இல்லை என்றால் அவைகளை ஒழிக்கலாம். செய்யமாட்டார்கள். அனைத்தையும் பதுக்கி விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X