முல்லைப் பெரியாறு: தமிழகத்திற்கு எதிராக கேரள காங்., எம்.பி.,க்கள் போராட்டம்!

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையை திறந்த தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள காங்கிரஸ் எம்.பி.,க்கள் பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே அமைந்துள்ளது. கேரளாவில் அணை அமைந்திருந்தாலும் அதை நிர்வகிக்கும் உரிமை தமிழக அரசிடம் உள்ளது.
Mullaiperiyaru, Kerala, Congress, MPs, Protest, Against, Tamil Nadu, முல்லைப்பெரியாறு, தமிழகம், எதிர்ப்பு, கேரள காங்கிரஸ், எம்பிக்கள், போராட்டம்

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையை திறந்த தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள காங்கிரஸ் எம்.பி.,க்கள் பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news


முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே அமைந்துள்ளது. கேரளாவில் அணை அமைந்திருந்தாலும் அதை நிர்வகிக்கும் உரிமை தமிழக அரசிடம் உள்ளது. 19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வணையின் மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி அணையில் 142 அடி வரை நீரை பராமரிக்கலாம். அணை வலுவாக இருப்பதாக நிபுணர் குழு சான்றளித்துள்ளது. தற்போது கேரள காங்கிரஸ் அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அங்கு அரசியல் செய்து வருகின்றது.


latest tamil news


இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் 9 கதவுகளையும் தமிழக அரசு திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதாகவும், தமிழக அதிகாரிகள் மக்களின் உயிருடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பாராளுமன்றத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


latest tamil news


இது பற்றி கேரள காங்., எம்.பி., ஜோஸ் கே. மணி கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்த அறிவிக்கப்படாத முடிவால் முல்லை பெரியாற்றின் கரையோர தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அணையின் நீர் தமிழகத்துக்கு சொந்தமானது, அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், கேரள மக்களின் பாதுகாப்பையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-டிச-202113:41:11 IST Report Abuse
pradeesh parthasarathy ஏன் அங்குள்ள பிஜேபி யம் இதை தானே சொல்கிறது ....
Rate this:
Cancel
08-டிச-202110:05:06 IST Report Abuse
பேசும் தமிழன் கேரளா MP கள் கூட்டத்தில் வயநாடு MP யை காணோம்.. தமிழ் நாட்டில் இல்லாத கான்கிராஸ் க்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள்.. அழகிரி, ப சி, பீட்டர் அல்போன்ஸ், ஜோதி மணி அக்கா... யாரையும் காணோம்.... தமிழன் ஏமாற பிறந்தவன்
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
08-டிச-202107:37:13 IST Report Abuse
sridhar தமிழ்நாடு கான்கிராஸ் கட்சிக்கு இரட்டை நிலைப்பாடு புதிதல்ல .. இங்கே கம்யூனிஸ்ட் வாழ்க என்றும் அங்கே கம்யூனிஸ்ட் ஒழிக என்றும் கூவும் கொள்கை இல்லாத வெட்கம் இல்லாத கட்சி தான் அது. அறிவுள்ளவன் கான்கிராஸ் கட்சியில் இருக்கமாட்டான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X