உ.பி.,க்கு ‛‛ரெட் அலெர்ட்'': சமாஜ்வாதி தலைவர்கள் மீது பிரதமர் மறைமுக தாக்கு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோரக்பூர்: "சிவப்பு தொப்பி அணிந்தவர்களால், உ.பி.,க்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) என அர்த்தம் என்பதை மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். (சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிவப்பு தொப்பியை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளதால், அந்த தொப்பி அவர்களின் அடையாளமாக மாறியுள்ளது. இதைத் தான் பிரதமர் மோடி, ‛ரெட்
PM Modi,  fertiliser plant, AIIMS, UP, Gorakhpur,  Samajwadi Party, PM, Modi,red caps,red alert, UP

கோரக்பூர்: "சிவப்பு தொப்பி அணிந்தவர்களால், உ.பி.,க்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) என அர்த்தம் என்பதை மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். (சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிவப்பு தொப்பியை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளதால், அந்த தொப்பி அவர்களின் அடையாளமாக மாறியுள்ளது. இதைத் தான் பிரதமர் மோடி, ‛ரெட் அலர்ட்' என்று பொருள்படும்படி மறைமுகமாக சாடினார்.)


latest tamil news


உ.பி., மாநிலம் கோரக்பூரில் உரத்தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்திய மருந்து கவுன்சிலின் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் நடக்கும் முறைகேட்டை எனது அரசு தடுத்துள்ளது. விவசாயிகளின் நிலங்களுக்கு எந்த உரம் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வதற்காக மண்வள பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட உரத்தொழிற்சாலைகளை சீரமைத்ததால், யூரியா உற்பத்தி அதிகரித்துள்ளது.


latest tamil news


பா.ஜ., ஆட்சிக்கு முந்தைய 10 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலுவை தொகையை விட கடந்த நாலரை ஆண்டுகளில் யோகி அரசு அதிகமான தொகையை வழங்கி உள்ளது.


latest tamil newsசிவப்பு தொப்பி அணிந்தவர்கள், சிவப்பு சுழல் விளக்கிற்காகவும், அதிகாரத்திற்காகவும் கவலைப்படுவது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு, உங்களின் வலி மற்றும் கவலை பற்றி கவலை இல்லை.ஊழல் செய்யவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டி தங்களது கஜானாவை நிரப்பவும், மாபியாக்களுக்கு சுதந்திரம் அளிக்கவுமே அதிகாரத்திற்கு வர அவர்கள் விரும்புகின்றனர்.


latest tamil news
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யவுமே, சிவப்பு தொப்பி அணிந்தவர்கள் இங்கு ஆட்சி அமைக்க விரும்புகின்றனர். எனவே, சிவப்பு தொப்பி அணிந்தவர்களால், உ.பி.,க்கு சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது என்பதையும், எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-டிச-202106:36:59 IST Report Abuse
 N.Purushothaman போட்டு தாக்கு ...தாக்கு ..தாக்கு ....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-டிச-202122:11:21 IST Report Abuse
sankaseshan விஸ்வநாத நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் ஒரு கவலையும் இல்லை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-டிச-202122:08:18 IST Report Abuse
sankaseshan Whenever sp come to power in UP lawless will follow. Gundas and roudism will take over . After Kavi tale over many roudi elements have been ed in encounter Akilesh and Mlayam who was a wrestler are very much worried and want to bring back roudism in U P
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X