தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 710 ஆக சற்று குறைந்துள்ளது: 731 பேர் நலம்| Dinamalar

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 710 ஆக சற்று குறைந்துள்ளது: 731 பேர் நலம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | |
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 719 ல் இருந்து 710 ஆக சற்று குறைந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 731 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,00,393 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 708 பேரும் மேற்குவங்க மாநிலத்திலிருந்த

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 719 ல் இருந்து 710 ஆக சற்று குறைந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 731 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,00,393 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 708 பேரும் மேற்குவங்க மாநிலத்திலிருந்த வந்த 2 பேரையும் சேர்த்து 710 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,31,945 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,49,85,621 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 411 பேர் ஆண்கள், 299 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,94,612 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,37,295 ஆகவும் அதிகரித்து உள்ளது. 731 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,87,414 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 4 பேரும், அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,549 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,07 ம் தேதி) 126 ஆக குறைந்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X