பொது செய்தி

இந்தியா

மூன்றாவது அலை வரும் ஐ.எம்.ஏ., எச்சரிக்கை

Updated : டிச 09, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (16+ 10)
Share
Advertisement
புதுடில்லி:'உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும்' என, இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.தென் ஆப்ரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு 'ஒமைக்ரான்' என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. 23 பேர்இந்த வகை வைரஸ் மிக
மூன்றாவது அலை , ஐ.எம்.ஏ., எச்சரிக்கை

புதுடில்லி:'உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும்' என, இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு 'ஒமைக்ரான்' என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.


23 பேர்

இந்த வகை வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால், 'கவலைக்குரிய வகை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. நம் நாட்டில் 23 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவச் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:ஒமைக்ரான் வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட நாட்டின் அனுபவம் மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், இந்த புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவும் என்பது தெரியவந்துள்ளது.

தொற்று பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நேரத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


நடவடிக்கை


இதை கட்டுப்படுத்த இப்போதே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள், இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது 'டோஸ்' தடுப்பூசி போடப்பட வேண்டும். 12 - 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
08-டிச-202122:31:53 IST Report Abuse
Duruvesan மூர்கன் ஹிந்து பெயரில் ஐயர் 😂
Rate this:
Cancel
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
08-டிச-202116:38:51 IST Report Abuse
Ramasamy உலகம் முழுவதும் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் தடுப்பூசி வியாபாரத்தால் கிடைக்கும் கமிஷன் குறைந்து விட்டது. அதனால் மக்களை பயமுறுத்தி தடுப்பூசி போட வைக்க, இப்படி எல்லாம் பொய்களை உலக அரசுகளும், who அமைப்பினரும் பரப்பி வைக்கிறார்கள் . முதலிலுருந்தே இப்படி மாற்றி மாற்றி பொய்களை மட்டுமே பரப்பி வருகிறார்கள்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202113:30:26 IST Report Abuse
Visu Iyer இவ்வளவு திறமையா இருப்பவர்கள் என்றால் முதல் நாள் இரவில் மரணம் அடைந்ததாக சொன்னா ஜெயலலிதாவுக்கு ஏன் மறுநாள் எம்பிலாமிங் செய்தார்கள் என்று சொல்லவில்லையே... கூடி கழித்து பாருங்கள். கணக்கு சரி யா வரணும்.. இல்லாட்டி வர வைப்பாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X