'மாஜி' முதல்வர் விலகினார்: காங்.,குக்கு பின்னடைவு

Added : டிச 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பனாஜி:கோவாவின் முன்னாள் முதல்வரான ரவி நாயக் காங்.,கில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது கோவா மாநிலத்தில், காங்.,குக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ராஜினாமாகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2017
 'மாஜி' முதல்வர் விலகினார்: காங்.,குக்கு பின்னடைவு

பனாஜி:கோவாவின் முன்னாள் முதல்வரான ரவி நாயக் காங்.,கில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது கோவா மாநிலத்தில், காங்.,குக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


ராஜினாமா

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2017 தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்., 17ல் வென்றது. ஆனால் 13 தொகுதி களில் வென்ற பா.ஜ., மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து காங்.,கில் இருந்து பல எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். அதில் பெரும்பாலானோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.முன்னாள் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் இணைந்தார். இந்நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து நேற்று விலகினார். தன் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.


எதிர்பார்ப்பு

அவரது இரண்டு மகன்கள் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தனர். அதனால் இவரும் பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்.,கின் பலம் மூன்றாகக் குறைந்து உள்ளது.


எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது காங்., - எம்.பி.,யான ராகுல் பேசியதாவது: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் போராட்டத்தின்போது யாரும் இறந்ததாக தகவல்கள் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
போராட்டத்தின்போது உயிரிழந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் 152 பேருக்கு அரசு வேலை வழங்கப் பட்டு உள்ளது. ஹரியானாவில் உயிரிழந்த விவசாயிகளின் 70 பேர் பட்டியல் எங்களிடம் உள்ளது. இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிப்பை பார்லிமென்டில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அறிக்கை வெளியிட வலியுறுத்தி காங்., தேசியவாத காங்., மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:56:14 IST Report Abuse
J.V. Iyer காங்கிரசை இவ்வளவு சீக்கிரம் கரைப்பதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். அது ராகுலிடம் நிறைய உள்ளது. அதை காணாமல் செய்வதற்கு இப்போது நாளும் பொழுதும் பாடுபடுகிறார். அவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X