புதுடில்லி:ராஜ்யசபாவில் இருந்து 12 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சார்பில் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நேற்றும் நடந்தது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த கூட்ட தொடரில் அமளியில் ஈடுபட்ட காங்., சிவசேனா, திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் இந்த கூட்டத்தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.அதை எதிர்த்து பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலை முன் 12 எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்ற எம்.பி.,க் களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.நேற்று காலை ராஜ்யசபா துவங்கியதும் இந்தப் பிரச்னை உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முயன்றன. அதற்கு அனுமதி தரப்படவில்லை. அமளியில் ஈடுபட்டதால் நேற்று மதியம் 2:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசே காரணம்!
ஜனநாயக நடைமுறைக்கு விரோதமாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா முடங்குவதற்கு பா.ஜ., அரசே காரணம். சபை செயல்படக் கூடாது என்பதே அவர்களது நோக்கம். சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
மல்லிகார்ஜுன கார்கே
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement