அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீணான தண்ணீர் குறித்து தமிழகத்திடம் கர்நாடகா கேள்வி!

Updated : டிச 08, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு, காவிரி நீர் கடலுக்கு சென்று வீணானது குறித்த விபரங்களை வழங்கும்படி, தமிழகத்திடம் கர்நாடகா அரசு கேட்டுள்ளது. நேரடியாக களமிறங்கி தகவல் சேகரிக்கும் முயற்சியில், அம்மாநில நீர்வளத் துறையினரும் ஈடுபட்டுஉள்ளனர். இதன் வாயிலாக, மேகதாது அணை கட்டுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெறும் முயற்சிகளை, கர்நாடகா அரசு துவக்கி உள்ளதா என்ற
 வீணான தண்ணீர்,தமிழகத்திடம் கர்நாடகா  கேள்வி!

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு, காவிரி நீர் கடலுக்கு சென்று வீணானது குறித்த விபரங்களை வழங்கும்படி, தமிழகத்திடம் கர்நாடகா அரசு கேட்டுள்ளது. நேரடியாக களமிறங்கி தகவல் சேகரிக்கும் முயற்சியில், அம்மாநில நீர்வளத் துறையினரும் ஈடுபட்டு
உள்ளனர்.

இதன் வாயிலாக, மேகதாது அணை கட்டுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெறும் முயற்சிகளை, கர்நாடகா அரசு துவக்கி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும், காவிரி நீரின் வாயிலாக தீர்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வீணடிப்புlatest tamil news
ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்கி அடுத்தாண்டு மே மாதம் முடியும். நடப்பு நீர் வழங்கும் காலத்தில், இம்மாதம் 5ம் தேதி வரை, 217 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.

இந்த கால கட்டத்தில், 158 டி.எம்.சி., மட்டுமே வழங்கி இருக்க வேண்டும். தமிழகத்திற்கு கூடுதலாக 58 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் சேலம்- - மேட்டூர் அணையில் சேமிக்கப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, ஜூன் 12 முதல் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை 93.5 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. நவம்பரில் அதிக நீர்வரத்து கிடைத்ததால், மேட்டூர் அணை முழு கொள்ளளவும் நிரம்பியது. அதிலிருந்து தொடர்ச்சியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாள்தோறும் பல டி.எம்.சி., நீர், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பி வீணடிக்கப்பட்டு வருகிறது.


நான்கு அணைகள்இவ்வாறு வீணடிக்கப்பட்டு வரும் உபரி நீர் குறித்த கணக்கை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வாயிலாக, தமிழக அரசிடம் கர்நாடகா அரசு கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், இது குறித்து கேள்வி எழுப்ப, அம்மாநில நீர்வளத் துறையினர் திட்ட மிட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., என நான்கு அணைகளை கர்நாடகா கட்டியுள்ளது. அவற்றில் இருந்து தான், தற்போது தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. கூடுதல் நீரை சேமிப்பதற்காக, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகா இறங்கியுள்ளது. இதற்காக 9,000 கோடி ரூபாயை கர்நாடக அரசு செலவிட உள்ளது.
இதற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறவும், தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் காவிரி நீர் வரத்து குறைந்து விடும். எனவே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்க, தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் குறித்த விவரங்களை, தமிழக அரசு வழங்க வாய்ப்பில்லை. எனவே, அதற்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளில், கர்நாடக நீர்வளத்துறையினரே நேரடியாக களமிறங்கி உள்ளனர்.


இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் நீரை சேமிக்க போதிய கட்டமைப்புகள் இல்லாததால், அதிகளவில் நீர் வீணடிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக, கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, மேகதாது அணை கட்டுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெறும் முயற்சிகளை, அம்மாநில அரசு துவக்கி உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.எனவே, பெண்ணையாற்றின் துணை ஆற்றில், கதவணை கட்டிய விவகாரத்தில் கோட்டை விட்டது போல அல்லாமல், தமிழக அரசும், நீர்வளத்துறையினரும், காவிரி தொழில்நுட்ப பிரிவினரும் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madurai kasi kumaran - Madurai 625007,இந்தியா
08-டிச-202121:27:10 IST Report Abuse
madurai kasi kumaran காவிரி நீரினை உரிய காலத்தில் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கண்டனத்துக்குரியது. கனமழை வரும் பொழுது திறந்து விட்டு அதனை கொடுத்த அளவாக சொல்வதும், அவ்வாறு திமு திமு என்று திறந்துவிட்டு அதனை சேமிக்கத்தெரியவில்லை எனக் காரணம் காட்டி, மேலும் கர்நாடக எல்லையில் மீண்டும் அனை கட்டுவது, பாசனமே வாழ்க்கையென உள்ள மாவட்டங்களை வஞ்சிப்பது போலாகும். அவரவர் மாநில மக்களை வளமைப்படுத்துவது மாநில அரசின் வேலை என்றாலும், அனைகள் கூடக் கூட மழை வெள்ளம் வராத காலத்தில் காவிரி நீர் தமிழகத்திற்கு வருவது கேள்விக்குறியாகும். அனைபாதுகாப்பு என்று சொல்லி அதிக நீரை தேக்கியும், தமிழகம் வறண்டு போக வழிவகுக்கும். மழை வெள்ளம் வரும் காலம் ஏன் அந்த மாதத்திற்கான நீரை விட அதிகமாக திறந்து விடுகிறார்கள். அது எவ்வாறு தடுக்கமுடியாதோ, அதுபோல், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு நீரை வழங்காவிட்டால், அதற்கு அனைகள் பாதுகாப்பு காரணம் என சொன்னால், அதனையே உறுதிப்படுத்தும் வகையில் மேலும் அனை கட்டுவது, தமிழக மக்கள் விவசாயத்தை மறந்து விட்டு, மீன் பிடித்தலும், படகு சவாரியும் செய்ய வழிவகுக்கும். மேலும் ஆற்று வெள்ள நீர், கடலில் கலப்பது சிறந்ததே என்றும் புவியியல் சுழற்சி அது தேவையே என்றும் கூறுகின்றனர். எனவே, வெள்ளக்காலத்தில் திறந்த நீரை பாசனத்திற்குத் திறந்து விட்டதாக ஏற்க முடியாது. இது தீராத பிரச்சனை என்றால், மாநில எல்லைகளின் கோடுகளை மாற்றி அமைப்பதில் முயற்சி செய்யலாம். மொழி வாரி மாநிலம் பிரித்த தவறை மாற்றி, சீரமைக்கலாம். பிரச்சனைகளைத் தீர்க்காமலே, வரும் சந்ததியருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விட்டுவைத்தல் ஒழுங்கீனமாகும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202118:45:08 IST Report Abuse
Bhaskaran Pothupanithurai poriyaalargalukum athigaarikal amaicharukkum veru velai kal niraya irukinrana
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
08-டிச-202116:09:04 IST Report Abuse
V Gopalan Though it is belatedly, what Karnataka Govt did is welcome move. Nature gives bountiful rain that too especially this year beyond imagination, all over South India got its share more than normal. Such precious water flown into ocean means the human being yet to realise the importance of water. Cauvery is flowing a long distance ie. more than 200 KM. in Tamilnadu more than Karnataka, why the Govt of Tamilnadu failed to construct the check dams to impound precious water. Supreme Court or any authority who control the Cauvery Management Board must and should take note of the water is being wasted or flown into ocean.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X