ராணுவ அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்| Dinamalar

ராணுவ அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (4)
புதுடில்லி :வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.அப்பாவி மக்கள்நாகாலாந்தில் முதல்வர் நிபியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள மான்
ராணுவ, அதிகார சட்டம்,  திரும்பப் பெற, வலியுறுத்தல்

புதுடில்லி :வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


அப்பாவி மக்கள்



நாகாலாந்தில் முதல்வர் நிபியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள மான் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை பயங்கரவாதிகளின் வாகனம் என நினைத்து துப்பாக்கியால் சுடத் துவங்கினர். அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்கு
தல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 14 அப்பாவி மக்களும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ராணுவப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது.பயங்கரவாதிகளின் நடமாட்டம் மற்றும் பாதிப்பு உள்ளதால் இந்த சட்டத்தின்படி ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் கைது செய்து விசாரிக்க முடியும்; துப்பாக்கிச் சூடும் நடத்த முடியும்.இந்த சட்டம் நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும், மணிப்பூரில் இம்பாலைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் அமலில் உள்ளன.இதைத் தவிர அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் ஒரு சில இடங்களில் அமலில் உள்ளது.


latest tamil news



சர்ச்சை



திரிபுரா மற்றும் மேகாலயாவின் ஒரு சில பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது.நாகாலாந்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.நாகாலாந்து முதல்வர் நிபியு ரியோ மற்றும் மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா இதை வலியுறுத்திஉள்ளனர்.
இருவரும் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விசாரணை குழு அமைப்பு



'நாகாலாந்து சம்பவம் குறித்து உயர்நிலை ராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படும்' என, ராணுவம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒருவரது தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து, ராணுவம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு பல முன்னாள் ராணுவ மூத்த அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X