இரட்டைமடி வலையில் மீன்பிடிப்பு கடல் தொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டு

Added : டிச 08, 2021
Advertisement
ராமநாதபுரம்:ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் மீன்வளத்துறை ஆசியுடன் டிச.15 முதல் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாராகி வருவதாக கடல் தொழிலாளர் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.சங்க மாவட்டக்குழு சார்பில்கூறியிருப்பது:கடந்த ஆண்டு இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு மீன்வளத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்ட 134 விசைப்படகு உரிமையாளர்கள்

ராமநாதபுரம்:ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் மீன்வளத்துறை ஆசியுடன் டிச.15 முதல் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாராகி வருவதாக கடல் தொழிலாளர் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.
சங்க மாவட்டக்குழு சார்பில்கூறியிருப்பது:கடந்த ஆண்டு இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு மீன்வளத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்ட 134 விசைப்படகு உரிமையாளர்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் புதிதாக கட்டப்பட்ட படகுகள் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து மீன்பிடி உரிமம் இல்லாமல் வாங்கி வரப்பட்ட அனுமதிக்கப்படாத 20 பைபர் விசைப்படகுகள் இங்கு ஏற்கனவே புழக்கத்தில் இருந்த விசைப்படகுகளின் பதிவு எண்களை பயன்படுத்தி மீன் பிடிக்க ராமேஸ்வரம் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரணமாக நடக்க வாய்ப்பு இல்லை.இதனை பின்பற்றி கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதிகளில் இருந்தும் மேலும் பல படகுகள் வர உள்ளன.இதனால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நெருக்கடி ஏற்படுவதுடன் இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர்கள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.

எனவே ராமநாதபுரம்மீன்வளத்துறையின் இது போன்ற முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து கடல் வளம், மீன் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.இதுபோன்ற சூழல் ஏற்கனவே ஏற்பட்ட போது மீனவர் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு இடமாறுதல் செய்யப்பட்ட துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் மீண்டும் இங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட்டதே மீண்டும் இந்த நிலைக்கு காரணம்.இவர்களை உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறுகையில், ''கண்டிப்பாக இரட்டைமடி வலைகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எந்த வாய்ப்பும் இல்லை. படகுகளின் பதிவு எண் குறித்து ஆய்வு நடக்கிறது. இறுதியாகத்தான் எத்தனை படகுகள் முறைகேடாக பதிவு எண் பெறப்பட்டது என்பது குறித்து தெரிய வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X