இந்தியா

பனாமா, பாரடைஸ் பேப்பர்ஸ் : ராஜ்யசபாவில் அமைச்சர் விளக்கம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி :'பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில், நம் நாட்டுக்கு தொடர்புடைய 930 நிறுவனங்களின் பெயரில் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் கணக்கில் வராத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு
'பனாமா, பாரடைஸ் பேப்பர்ஸ்' :ராஜ்யசபா, அமைச்சர் விளக்கம்

புதுடில்லி :'பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில், நம் நாட்டுக்கு தொடர்புடைய 930 நிறுவனங்களின் பெயரில் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் கணக்கில் வராத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் ரகசிய ஆவணங்கள், 2016ல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news

முறைகேடுபனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் 2016ல் வெளியிட்டது.
இதே போல, 2017ல் 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் வெளியாகின. இதில் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு துறை பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. நம் நாட்டை சேர்ந்த பல பிரபலங்கள், நிறுவனங்களும் இடம் பெற்று இருந்தன.
இது குறித்து ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது நேற்று பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:

பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில், 2021 அக்., நிலவரப்படி, 930 இந்திய நிறுவனங்களின் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் கணக்கில் வராத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
முறைகேடில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வருமான வரி சட்டம் மற்றும் கறுப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடி வரிச் சட்டத்தின் கீழ் சோதனைகள் மற்றும் பறிமுதல்,ஆய்வுகள், விசாரணைகள், வருமானத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல், வட்டியுடன் வரி விதித்தல், அபராதம் விதித்தல், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரும் புகார்களை பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும்.


குற்றவியல் வழக்குஇதில், 153.88 கோடி ரூபாய் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளன. பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழலில் 52 வழக்குகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 130 வழக்குகளில் கறுப்பு பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-டிச-202111:55:01 IST Report Abuse
Ramesh Sargam இந்த ஊழல் காங்கிரஸ் ஆட்சியின் போது அதிகம் நடந்திருக்கிறது. மேலும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் காங்கிரஸ் கட்சியினர், மற்றும் காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியினர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Rate this:
Cancel
08-டிச-202105:23:04 IST Report Abuse
அப்புசாமி ஆனா மாட்டுனவங்க பேரைச் சொல்லமாட்டோம். அது ராணுவ ரகசியம். ஏன்னா, மிரட்ட முடியாதே... தவிர, பா.ஜ ஆளுங்களும் இதே லிஸ்டில் இருக்காங்களே...
Rate this:
Cancel
08-டிச-202104:08:15 IST Report Abuse
Muralidharan S R எல்லாம் சரி. ஆனால் ஒரு ஊழல் வழக்குக்கூட உருப்படியாக முடிந்து தண்டனை எதுவும் கொடுக்க படவில்லை இதுவரை. லாலு மட்டும்தான் மாட்டிக்கொண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X