பொது செய்தி

இந்தியா

'மாடலிங்கில்' கால் பதித்தார் சச்சின் மகள்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை : கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின் மகள், சாரா டெண்டுல்கர், 24, மாடலிங் உலகில் கால் பதித்துள்ளார். புதிய விளம்பர படத்தில் அவர் இடம்பெறும் படம், சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.ஆர்வம்மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வரும் சச்சின் டெண்டுல்கர்,நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.பல சாதனைகளைப்
Sachin Tendulkar, Sara, modelling,Sachin, Tendulkar

மும்பை : கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின் மகள், சாரா டெண்டுல்கர், 24, மாடலிங் உலகில் கால் பதித்துள்ளார். புதிய விளம்பர படத்தில் அவர் இடம்பெறும் படம், சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.


ஆர்வம்


மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வரும் சச்சின் டெண்டுல்கர்,நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.பல சாதனைகளைப் படைத்துள்ள அவர், கிரிக்கெட்டின் கடவுளாக, அவருடையரசிகர்களால் பார்க்கப்படுகிறார். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரானசச்சின் டெண்டல்கர், பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார், நடித்து வருகிறார்.

அவருடைய மகன், அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே மும்பை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் சச்சின், டாக்டர் அஞ்சலி தம்பதியின் மூத்த மகள், சாரா டெண்டுல்கர், மாடலிங் உலகில் கால் பதித்துஉள்ளார்.


latest tamil news



பிரபல ஆடைநிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்து உள்ளார். புகழ்பெற்ற மாடல்களான பனிதா சாந்து, தானியா ஷரோப் ஆகியோருடன் நடித்துள்ள அந்த விளம்பரம் தொடர்பான படங்களை, சமூக வலை தளத்தில் சாரா வெளியிட்டுள்ளார்.


சமூக வலை தளம்


லண்டன் பல்கலை ஒன்றில் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ள சாரா, ஏற்கனவே பலவித கவர்ச்சி ஆடைகளுடன் சமூக வலை தளத்தில் படங்களை வெளியிட்டு, பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். 'இன்ஸ்டாகிராம்' சமூக வலை தளத்தில் மட்டும் அவரை, 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சாரா டெண்டுல்கர், 24 TOO LATE
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202118:36:40 IST Report Abuse
Bhaskaran Maruthuvam padithullaar athil ethenum saathanai seiyalaame
Rate this:
Cancel
subramanian -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202112:34:17 IST Report Abuse
subramanian மருத்துவம் படித்தவர் அதில் சாதிக்கலாமே
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
08-டிச-202114:52:25 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்சம்பாதிக்கும் வாய்ப்பு இதில்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X