அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணைகள் பாதுகாப்பு மசோதா: பா.ஜ., அண்ணாமலை உறுதி

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: 'அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல்
BJP,Annamalai,Dam Safety Act,Bharatiya Janata Party,பாஜ

சென்னை: 'அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் செய்வதற்காக தி.மு.க. - ம.தி.மு.க. போன்ற கட்சிகள் எதிர்க்கின்றன.

காங். தலைமையில் இருந்த மத்திய அரசின் அலட்சியத்தால் 34 ஆண்டுகளாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம். அணை பாதுகாப்பு மசோதா வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்.


latest tamil news



அணை பாதுகாப்பு மசோதாவானது நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. அணை பராமரிப்பில் மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரின் மற்றொரு அறிக்கையில் 'ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்துாரில் மணிகண்டன் என்ற கல்லுாரி மாணவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் முழுமையான விசாரணை நடக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
08-டிச-202112:00:52 IST Report Abuse
RandharGuy சாரி கிங்ஸ்- சாரி சிஆர்பிஎப் - சாரி பார்மர்ஸ் - சாரி நகாஸ் - சாரி அணைகள் பாதுகாப்பு மசோதா
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
08-டிச-202109:42:40 IST Report Abuse
Thirumal Kumaresan ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது என தெரிந்தும் ஓட்டு போட்ட ஹிந்து... என்ன செய்வது மணிகண்டனைபோல் நீதி கிடைக்காமல் போக.....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
08-டிச-202107:37:08 IST Report Abuse
J. G. Muthuraj பலமுயற்சிகள் மேற்கொண்டு அணைகளை கட்டுவித்த மாநில அரசுகளுக்கு தாங்கள் கட்டியதை பராமரிக்க தெரியாதோ? எது... எது.. மாநில அரசுகளுக்கு பொறுப்புணர்வு இல்லையா? அவரவர்கள் கஷ்டப்பட்டு கட்டிய அணைகளை ஒன்றிய அரசு அள்ளிவாரி தனது முந்தானையில் முடிஞ்சிக்கொள்கிறது.நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளா? இது என்னடா இது, ஒரே தேசம்-ஒரேமொழி-ஒரே ரேஷன் கார்டு கணக்கால இருக்கு. விவசாயிகளுக்கு சேரவேண்டிய தண்ணீரையும் கட்டுப்படுத்த டில்லியில்தான் மெயின் சுவிச்....எப்படி மாநில முதல்வர்கள் இது குறித்து அமைதியாக இருக்கிறார்கள்?....
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202110:13:23 IST Report Abuse
Kasimani Baskaranசமீபத்தில் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப்பெரியார் அணையில் கேரள அதிகார்கள் தண்ணீர் திறந்துவிட்டார்கள். அது போன்ற கேவலங்களுக்கு உங்களது பதில் என்ன?...
Rate this:
enkeyem - sathy,இந்தியா
08-டிச-202115:00:17 IST Report Abuse
enkeyemஅணை கட்டியது ஒரு புறம் இருக்கட்டும். அணைக்கு வர வேண்டிய தண்ணீருக்கு மாநில அரசுகளால் என்ன செய்ய முடிந்தது? கடந்த முப்பது வருடங்களாக இதை வைத்து அரசியல் செய்ய மட்டுமே முடிந்தது. கர்நாடக கேரளா அரசுகளின் அடாவடித்த தனத்தை மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்தால் மட்டுமே சாத்தியம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X