பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் படிபூஜை, உதயஸ்தமன பூஜை 2028 வரை முன்பதிவு நிறைவு

Added : டிச 08, 2021
Share
Advertisement
சபரிமலை : சபரிமலையில் படி பூஜை 2036ம் ஆண்டு வரை, உதயஸ்தமனபூஜை 2028 வரை முன்பதிவு முடிந்து விட்டது.சபரிமலையில் தினமும் மாலை தீபாராதனை முடிந்ததும் 18 படிகள் சுத்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து அதில் தேங்காய் வைத்து பூமாலை அணிவித்து விளக்கு ஏற்றப்படும். தொடர்ந்து தந்திரிகள் பூஜை நடத்துவார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறும். பின்னர் தந்திரி
Sabarimala, சபரிமலை, படிபூஜை

சபரிமலை : சபரிமலையில் படி பூஜை 2036ம் ஆண்டு வரை, உதயஸ்தமனபூஜை 2028 வரை முன்பதிவு முடிந்து விட்டது.

சபரிமலையில் தினமும் மாலை தீபாராதனை முடிந்ததும் 18 படிகள் சுத்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து அதில் தேங்காய் வைத்து பூமாலை அணிவித்து விளக்கு ஏற்றப்படும். தொடர்ந்து தந்திரிகள் பூஜை நடத்துவார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறும். பின்னர் தந்திரி ஒவ்வொரு படியிலும் சென்று பூஜைகள் செய்த பின்னர் கலச நீர் 18- வது படியில் இருந்து ஊற்றப்படும். தொடர்ந்து படிகளுக்கு தீபாராதனை நடைபெறும். இதற்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். 2036 வரை முன்பதிவு முடிந்துள்ளது.


latest tamil news



காலை நடை திறந்து நிர்மால்யதரிசனம் முதல் இரவு அத்தாழ பூஜை வரை ஐயப்பன் சன்னதியில் நடைபெறுவது உதயாஸ்தமனபூஜை. இந்த பூஜை பதிவு செய்தவர்கள் நாள் முழுவதும் எல்லா பூஜைகளின் போது முன்வரிசையில் நின்று ஐயப்பனை கும்பிட முடியும்,. இதற்கு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். இதற்கு 2028 வரை முன்பதிவு முடிந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X