சபரிமலை : சபரிமலையில் படி பூஜை 2036ம் ஆண்டு வரை, உதயஸ்தமனபூஜை 2028 வரை முன்பதிவு முடிந்து விட்டது.
சபரிமலையில் தினமும் மாலை தீபாராதனை முடிந்ததும் 18 படிகள் சுத்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து அதில் தேங்காய் வைத்து பூமாலை அணிவித்து விளக்கு ஏற்றப்படும். தொடர்ந்து தந்திரிகள் பூஜை நடத்துவார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறும். பின்னர் தந்திரி ஒவ்வொரு படியிலும் சென்று பூஜைகள் செய்த பின்னர் கலச நீர் 18- வது படியில் இருந்து ஊற்றப்படும். தொடர்ந்து படிகளுக்கு தீபாராதனை நடைபெறும். இதற்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். 2036 வரை முன்பதிவு முடிந்துள்ளது.
காலை நடை திறந்து நிர்மால்யதரிசனம் முதல் இரவு அத்தாழ பூஜை வரை ஐயப்பன் சன்னதியில் நடைபெறுவது உதயாஸ்தமனபூஜை. இந்த பூஜை பதிவு செய்தவர்கள் நாள் முழுவதும் எல்லா பூஜைகளின் போது முன்வரிசையில் நின்று ஐயப்பனை கும்பிட முடியும்,. இதற்கு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். இதற்கு 2028 வரை முன்பதிவு முடிந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE