உ.பி., தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜ., தோல்வியை தழுவும்: அகிலேஷ் திட்டவட்டம்

Added : டிச 08, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
லக்னோ: உ.பி., சட்டமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜ., தோல்வியை தழுவும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கடந்த கால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜ., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்குவது சமாஜ்வாடி கட்சி. இதன் தலைவர்
UP election, BJP, Akhilesh Yadav,Lose, 400 Seats

லக்னோ: உ.பி., சட்டமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜ., தோல்வியை தழுவும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கடந்த கால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜ., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்குவது சமாஜ்வாடி கட்சி. இதன் தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது யோகி அரசை விமர்சித்து உத்தரப்பிரதேசத்தின் பல முக்கிய நகரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் 400 தொகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவும் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. மாநில சட்டமன்ற தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றினால் ஒரு கட்சி வலுவானதாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

மேலும் நாட்டிலேயே அதிக பட்டியலினத்தவர்களைக் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம். உத்தர பிரதேச தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவிலிருந்து மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள்வரை பல கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன. கடந்த கால யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இம்முறை 400 தொகுதிகளையும் பாஜக தோற்கும் நிலை ஏற்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கோரக்பூரில் அமர்ந்துகொண்டு யோகி ஆதித்யநாத் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக அகிலேஷ் விமர்சித்துள்ளார். மேலும் மாநிலத்தில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வளர்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

'கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாநிலத்தில் 70 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக யோகி ஆதித்யநாத் உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது பாஜ., தங்கள் விளம்பரத்தில் நான்கு இலட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. லக்கிம்பூர் கேரி விவகாரத்திற்கு யோகி பதில் கூறிய ஆகவேண்டும். யோகி முதல்வர் ஆவதற்கு முன்னர் அவர் மீது இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து அவர் விளக்கம் தைரியமிருந்தால் விளக்கமளிக்க வேண்டும்.' இவ்வாறு அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
08-டிச-202122:11:15 IST Report Abuse
Soumya ஏன் மூர்க்கா விடியல் எப்பிடி வெற்றி பெற்றான் கொஞ்சம் சொல்லு
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-202119:18:22 IST Report Abuse
முக்கண் மைந்தன் // யோகி மீது இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தைரியமிருந்தால் விளக்கமளிக்க வேண்டும்.// தாம்மேல இருக்கறே நூத்தம்பது கிரிமினல் கேசுங்கள தானே வாப்பஸ் வாங்கிட்டான்‼️
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-202119:14:35 IST Report Abuse
முக்கண் மைந்தன் அகிலேஷு சொன்னாப்லதான் இந்த வாட்டி நடக்கப்போவுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X