பொது செய்தி

தமிழ்நாடு

உச்சம் தொடும் முருங்கை விலை; கிலோ ரூ.300க்கு விற்பனை

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் காய்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னை கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, ஆந்திரா, தமிழகம்

சென்னை: மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் காய்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையானது.



latest tamil news




சென்னை கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறி காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது.
கடந்த மாதம் முதல், வரத்து குறைந்து தக்காளி தொடர்ந்து 100 ரூபாய்கு மேல் விற்பனையானது. சென்னைக்கு, 1,110 டன் தக்காளி தேவையுள்ள நிலையில், நேற்று, 650 டன் மட்டுமே வந்தது. இதனால், கிலோ 90 -- 100 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல், பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னைக்கு முருங்கைக்காய் வரத்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, முருங்கைக்காய் சீசன். தற்போது, சீசன் இல்லாத காரணத்தால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து மட்டுமே முருங்கைக்காய் வரத்து உள்ளது. இதில், மஹாராஷ்டிராவில் இருந்து, 500 கிலோவும், குஜராத் இருந்து, 6 டன் முருங்கைக்காயும் வந்துள்ளது.



latest tamil news




சீசன் காலங்களில், தினமும் 10 லாரி வரத்து இருந்த இடத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும், முருங்கைக்காய் வரத்து உள்ளதால், மஹாராஷ்டிரா முருங்கைக்காய் கிலோ 270 -- 300 ரூபாய்க்கும், குஜராத் 160 -- 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'முருங்கைக்காய் சீசன் முடிந்ததால், வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. 'குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, ரயிலில் முருங்கைக்காய் வருகிறது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202118:40:00 IST Report Abuse
Bhaskaran Intha samayathil paakiyaraaj magan murungaikaai chips cinimaa velividukiraar
Rate this:
Cancel
08-டிச-202115:31:34 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட மழை, வெள்ளம் வாட்டுகிறது. அந்த மாநிலங்களில் இதுவரை காய்கறி விலை எறவில்லை. இத்தனைக்கும் இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கும் காய்கறிகள் செல்கின்றன. அங்கெல்லாம் ஏறாத காய்கறி விலை தமிழகத்தில் மட்டும் தான் ஏறியிருக்கிறது. புரோக்கர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியை கமிஷனாக திராவிட குடும்பங்களுக்கு அனுப்புவதாக செய்தி. விடியல் ஆட்சியின் சாதனையை பாருங்கள்!!!
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
08-டிச-202111:58:49 IST Report Abuse
pattikkaattaan முருங்கைக்காய் தினமும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? உங்கள் வீடுகளில் ஒரு முருங்கை மரம் வளருங்கள்.. எங்கள் வீட்டில் இருக்கு.. பிரச்சினை என்னனா நமக்கு வேண்டிய சமயத்தில் அது காய்க்காது.. தேவையில்லா சமயத்தில் மரம் முழுசும் காய்ச்சு தொங்கும் ..
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-டிச-202113:29:51 IST Report Abuse
 N.Purushothamanஇந்த மாதிரி கருத்து எழுதினால் இருநூறு ஊவாய் கொடுப்பார்களா ? அப்போ அதுக்காக தான் அப்படி எழுதறீங்களோன்னு சந்தேகம் வருது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X