பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சையில் சாதனை; பணியாளர் பற்றாக்குறையால் வேதனை!

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா பாதிப்பில் இருந்து, 23 ஆயிரம் பேர் உயிரைக் காத்துள்ள கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 80 சதவீதம் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், கோவை வரதராஜபுரத்தில், ரூ.520 கோடி மதிப்பில்,ஏழு லட்சம் சதுர அடி பரப்பில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி புதிதாகக் கட்டப்பட்டு,

கோவை: கொரோனா பாதிப்பில் இருந்து, 23 ஆயிரம் பேர் உயிரைக் காத்துள்ள கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 80 சதவீதம் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், கோவை வரதராஜபுரத்தில், ரூ.520 கோடி மதிப்பில்,ஏழு லட்சம் சதுர அடி பரப்பில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி புதிதாகக் கட்டப்பட்டு, 2016ம் ஆண்டில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.இங்கு, 17 பொதுவான மருத்துவத்துறைகள், 14 சிறப்பு துறைகள் என, மொத்தம் 31 துறைகள் செயல்படுகின்றன. ஆண்டுக்கு பல லட்சம் தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளித்து சேவையாற்றி வரும் இந்த மருத்துவமனை, கொரோனா தொற்றிலிருந்து பல ஆயிரம் பேர் உயிரைக் காத்து சாதனை படைத்துள்ளது.



latest tamil news



கடந்த 2020 ஜனவரி முதல் தேதியிலிருந்து 2021 செப்., 30 வரையிலுமான 21 மாதங்களில், இந்த மருத்துவமனையில், 24 ஆயிரத்து 493 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 1,395 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 23 ஆயிரத்து 98 பேருடைய உயிர்களை இ.எஸ்.ஐ., மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. இவ்வளவு சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்களைத் தவிர, மற்ற பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாகவுள்ளன.


இருப்பவர்கள் இவ்வளவுதான்!


நிர்வாகத்துறையில், 107 பேர் செய்ய வேண்டிய வேலையை 39 பேர் மட்டுமே செய்கின்றனர்; 68 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. 105 டாக்டர்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில், 97 டாக்டர்கள் மட்டும் பணி செய்கின்றனர். நர்ஸ்கள் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. நர்சிங் கண்காணிப்பாளர்களில், 25 பேருக்கு 25 பேரும், நர்ஸ்கள் மொத்தம், 258 பேருக்கு 256 பேரும்பணியாற்றுகின்றனர். இரண்டே பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட வேண்டியுள்ளது.


latest tamil news



தொழில்நுட்பப் பணியாளர்களில் 27 பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஏழு பேர் மட்டுமே உள்ளனர். 20 இடங்கள் காலியாகவுள்ளன. துணை மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள், 138 ஒதுக்கப்பட்டுள்ளன; ஆனால் இருப்பது 73 பேர் மட்டுமே. 65 இடங்கள் காலியாகவுள்ளன.துாய்மைப் பணியாளர், ஆய்வக உதவியாளர், ஆம்புலன்ஸ் உதவியாளர், சலவைத் தொழிலாளி, சவரத்தொழிலாளி போன்ற கீழ்நிலைப் பணியாளர்கள் பற்றாக்குறை பெரிதாகவுள்ளது. ஆண் நர்சிங் உதவியாளர் 29 பேர் இருக்க வேண்டிய இடத்தில், ஒருவர் மட்டுமே உள்ளார்; இன்னும் 28 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்தப் பிரிவில் மட்டும், 115 பேருக்கு 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இன்னும் 95 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். 80 சதவீதப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தொழில் வளமும், தொழிலாளர்களும் அதிகமாகவுள்ள மேற்கு மாவட்டங்களுக்கு வரமாகக் கிடைத்துள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு போதிய பணியாளர்களை நியமித்தால் இன்னும் பல லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X