பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சி பாதாள சாக்கடை 'மெகா' திட்டம் மாற்றியமைப்பு: புறநகர் உள்ளாட்சி பகுதிகளையும் ஒருங்கிணைக்க முடிவு

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
தாம்பரம்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்தும், பூந்தமல்லி நகராட்சி, குன்றத்துார் மற்றும் மாங்காடு பேரூராட்சிகளை ஒருங்கிணைத்தும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த, 'மெகா' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து,அதிகாரிகள் முதற்கட்ட ஆலோசனையை முடித்துள்ளனர்.சென்னை புறநகர்
தாம்பரம், மாநகராட்சி, பாதாள சாக்கடை,  மெகா திட்டம், மாற்றியமைப்பு,  புறநகர், உள்ளாட்சி பகுதி, முடிவு

தாம்பரம்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்தும், பூந்தமல்லி நகராட்சி, குன்றத்துார் மற்றும் மாங்காடு பேரூராட்சிகளை ஒருங்கிணைத்தும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த, 'மெகா' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து,
அதிகாரிகள் முதற்கட்ட ஆலோசனையை முடித்துள்ளனர்.

சென்னை புறநகர் உள்ளாட்சிகளில் நிலவும் கழிவு நீர் பிரச்னைக்கு, நீண்ட காலமாக தீர்வு எட்டப்படாமல் உள்ளது. பல்வேறு நிதி ஆதாரங்கள் இருந்தும், சென்னையின் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், கழிவு நீர் பிரச்னை தீர்க்கப்படாத தலைவலியாக நீடித்து வருகிறது. இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாததால், தெருக்களில் கழிவு நீர் ஆறாக ஓடுவதும், அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் தொடர் கதையாக உள்ளது.

தாம்பரத்தில் ரயில் முனையம், முக்கிய கல்வி நிறுவனங்கள், பெருங்களத்துாரில் ஐ.டி., நிறுவனங்கள், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்வை இருந்தும், இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாதால், இங்கு வசிப்போர் பெரும் இன்னல்களை சந்திக்கும் நிலை நீடிக்கிறது.
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, தாம்பரத்தை மையமாக வைத்து, புதிய மாநகராட்சி உருவாக்கப்பட வேண்டும் என, 20 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், புறநகரில் உள்ள, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரத்தை மையமாக வைத்து, புதிய மாநகராட்சி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. தற்போதைய தாம்பரம் மாநகராட்சியில், பல்லாவரத்தில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. இப்பகுதி, நகராட்சியாக இருந்தபோது, 75.33 கோடி ரூபாய் மதிப்பில், 2009ல், பாதாள சாக்கடை பணிகள் துவங்கின.

2012ல் பணிகள் முடிந்து, 159.74 கி.மீ., நீளத்திற்கு, கழிவு நீர் குழாய்கள் புதைக்கப்பட்டு, மொத்தம், 27 ஆயிரத்து, 243 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பம்மலில், 132.35 கோடி ரூபாயிலும், அனகாபுத்துாரில் 78.80 கோடி ரூபாயிலும், இந்தாண்டு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கி, நடந்து வருகிறது.


latest tamil news

கழிவு நீர் பிரச்னை


அதே போல, தாம்பரத்தில், 160.97 கோடி ரூபாயில், 2008ல் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள், இதுவரை நிறைவடையாததால், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கிழக்கு தாம்பரத்தில், பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், மேற்கு தாம்பரத்தில் இன்னும், 20 சதவீத இடங்களில் பணி முடிக்கப்பட வேண்டி
உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சியுடன் புதிதாக இணைந்துள்ள செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், திருநீர்மலை பகுதிகளிலும், மாநகராட்சி அருகில் பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சிகளிலும் கழிவு நீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்துள்ள, நகராட்சி, பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாதால், நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து, அவை மாசடைகின்றன. நீர் நிலைகள் மாசடைவதை தடுக்கவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும், இப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுளோம். தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதிகளிலும், அதை ஒட்டிய ஊராட்சிகளிலும், பூந்தமல்லி நகராட்சி, குன்றத்துார், மாங்காடு பேரூராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டமும் சமீபத்தில் நடந்தது. இதற்காக, 'மெகா' திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின், திட்டத்திற்கான நிதி பெறுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


அதிகரித்து வரும் மக்கள் தொகைதாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக, புறநகர் பகுதிகளும் வளர்ந்து வருகின்றன. இதில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு வெளியே உள்ள, பல்லாவரம் துவங்கி பெருங்களத்துார் வரை, 1 சதுர கி.மீ., பரப்பிற்கு, 15 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கின்றனர்.அதே போல, பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை, 1 சதுர கி.மீ., பரப்பிற்கு, 5,௦௦௦ முதல் 10 ஆயிரம் பேருக்கு மேல் வசிப்பதாக, 2011ம் ஆண்டு, அரசின் மக்கள் தொகை, புள்ளி விபரங்கள் அடிப்படையிலான கணக்கீடு தெரிவிக்கிறது.
மக்கள் தொகை, கடந்த ௧௦ ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. இச்சூழலில், தாம்பரம் மற்றும் பூந்தமல்லி என, இரு பகுதிகளை சுற்றியுள்ள உள்ளாட்சிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர, அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.
இத்திட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். புறநகரின் கழிவு நீர் பிரச்னைக்கு, முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து, அரசின் சிறப்பு நிதி வாயிலாகவோ அல்லது பன்னாட்டு வங்கிகளின் நிதி உதவியுடனோ, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், செம்பாக்கம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார் உள்ளிட்ட பேரூராட்சிகளோடு இணைத்து, ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை
அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போதே அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
எனினும், அத்திட்டம் 'கானல்' நீராக மாறியது. தற்போது, தாம்பரம் மாநகராட்சியாக உருவெடுத்துள்ளதால், இனியும் தாமதிக்காமல் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் துவங்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வி.சீதாராமன், 66,

பொது செயலர், தாம்பரம் மாநகராட்சி

குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு.

தாம்பரம், பூந்தமல்லி இரு பகுதிகளுக்கும், பாதாள சாக்கடை திட்டம் வருவது,
வரவேற்கத்தக்கது. ஆனால், தாம்பரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டம் போல,
இப்பணிகளிலும் குளறுபடி மற்றும் தாமதம் ஏற்படாதவாறு அரசு பார்த்து கொள்ள வேண்டும்.
இரண்டு பகுதிகளின், எம்.எல்.ஏ.,க்களும் நேரடியாக கண்காணித்து, இத்திட்டத்தை செயல்படுத்த,
முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்போது தான், அரசு முடிவு செய்துள்ளபடி அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்குள் இந்த பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

பி.விஸ்வநாதன், 63,

ஒருங்கிணைப்பாளர்,

சிட்லபாக்கம் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202118:29:54 IST Report Abuse
Bhaskaran Aalanthoor thittam enru paathaalasaakkadai thittathai Thuvakki kodikalai surutiya Annan aalanthoor bharathi avargalai kettaal vilakamaaga solvaar
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
08-டிச-202114:16:56 IST Report Abuse
MANIAN K கடை ஆரம்பம்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202112:01:36 IST Report Abuse
raja மெகா திட்டமுன்னு சொன்னா மெகா கொள்ளை அடிக்க போறானுவோன்னு அர்த்தம்.. வீராணத்துல அடிச்சாமாதிரி அடிக்க போறானுவோ இந்த கேடுகெட்ட பிறப்புகள் ...
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
08-டிச-202113:40:23 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்இராசா... கொள்ளை...ல உனக்கு பங்கு கொடுக்கலை...ங்கற கோபமா? பங்கு கொடுத்தா... திருடனுக்கு தேள் கொட்ன மாதிரி... கமுக்கமா உட்கார்ந்திருப்பே... சரிதானே...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X