பொது செய்தி

தமிழ்நாடு

கன மழையிலும் நிரம்பாத ஏரிகள்: காரணத்தை அறியுமா அரசு?

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: கன மழை கொட்டி தீர்த்தும், ஏழு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பாதது குறித்த காரணங்களை, நீர்வளத்துறை ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும்.பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், அவற்றிற்கு தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகளவில் நீர்வரத்து
கன மழை, ஏரிகள்,  அரசு,

சென்னை: கன மழை கொட்டி தீர்த்தும், ஏழு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பாதது குறித்த காரணங்களை, நீர்வளத்துறை ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும்.பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், அவற்றிற்கு தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது. நடப்பாண்டில், தென்மேற்கு பருவ மழை மட்டுமின்றி, வட கிழக்கு பருவ மழை வாயிலாகவும் நீர்வரத்து கிடைத்து வருகிறது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. பல அணைகளில் பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளில் 212 டி.எம்.சி., அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது.
இதேபோல, நீர்வளத் துறை பராமரிப்பில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இவற்றில் 8,690 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் 2,989 ஏரிகள் நிரம்பும் கட்டத்திலும் உள்ளன; 1,369 ஏரிகள் 50 சதவீதம் அளவிற்கு மேல் நிரம்பியுள்ளன.


latest tamil news
கன மழை கொட்டி தீர்த்தும் 753 ஏரிகளில் 25 சதவீதம் அளவிற்கும் 207 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளது; 130 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இந்த ஏரிகளுக்கு நீர் வராத காரணத்தை, நீர்வளத் துறையினர் ஆராய வேண்டும். அடுத்த மழைக்குள், இந்த ஏரிகளில் நீரை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
08-டிச-202118:44:57 IST Report Abuse
தமிழன் ஆட்டய போட்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. எப்பிடி நிரம்பும்?
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
08-டிச-202115:31:04 IST Report Abuse
அம்பி ஐயர் “30 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை...” அட... அப்படியா....??? அது எந்த ஊர் எந்தெந்த ஏரின்னு கொஞ்சம் சொல்லுங்க.... ப்ளாட் போட்டு வித்துடலாம்.... நீர்பிடிப்பு பகுதியில் இல்லைன்னு தாசில்தார்கிட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கிடலாம்.....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202111:57:17 IST Report Abuse
raja இந்த கேடுகெட்ட ஆட்சியில் உள்ள விடியல் அவரோட உடன் பிறப்புகளுக்கு தெரிந்ததெல்லாம் கலெக்ஷன் கமிஸ்ஸின். க்ரப்ஷன்.. அவ்ளோதான்...
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
08-டிச-202113:31:08 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்பெனின்... ராஜா...? பஞ்சம் பொழைக்க வெளியூர் போன உனக்கு இவ்வளவுனா... பொறந்த ஊர்லேயே வளர்ந்து... பொழப்ப நடத்துற... குப்ப கொட்ற எங்களுக்கு எவ்வளவு எகத்தாளம் இருக்கும்...? உன்னோட எரிச்சல் கமெண்ட்லேயே தெரியுது... உன்னோட குணம்..?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X