பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் ஜன., - நவ., வரையிலான மழை 171 செ.மீ.,: நிலத்தடி நீர்மட்டம் 4 மாதங்களாக ஏறுமுகம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜனவரி முதல் டிசம்பர் வரை 117 செ.மீ., பெய்ய வேண்டிய மழை, நவம்பர் முடிய, 171 செ.மீ., பெய்துள்ளதால், மாவட்டத்தில் நீர் வளம் அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் நான்கு மாதங்களாக ஏறுமுகமாக இருக்கிறது.வடகிழக்கு பருவமழையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிஉள்ளன. இவற்றில் இருந்து வழிந்த

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜனவரி முதல் டிசம்பர் வரை 117 செ.மீ., பெய்ய வேண்டிய மழை, நவம்பர் முடிய, 171 செ.மீ., பெய்துள்ளதால், மாவட்டத்தில் நீர் வளம் அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் நான்கு மாதங்களாக ஏறுமுகமாக இருக்கிறது.
வடகிழக்கு பருவமழையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிஉள்ளன. இவற்றில் இருந்து வழிந்த உபரி நீர், குடியிருப்புகள், வயல்களை சூழ்ந்தது. சாலை, தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்தின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.



latest tamil news





நடவடிக்கை



நவம்பர் மாதம் அதிக மழை பெய்யும் என்பதால், முன்கூட்டியே வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள், ஏரி பாதிக்கும் இடங்கள், கரை உடையும் பாதிப்புகள் போன்றவை முன்கூட்டியே கணித்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுபோலவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், அவற்றையெல்லாம் சுக்குநுாறாக உடைக்கும் வகையில் பெய்த கன மழை, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்தாண்டு பெய்த மழை, இயல்பைவிட மிக அதிகமாக பெய்யும் என, யாரும் எதிர்பார்க்கவில்லை. நவம்பர் மாதம் 29.4 செ.மீ., பெய்ய வேண்டிய மழை, 73.0 செ.மீ., பெய்துள்ளது. ஒரே மாதத்தில், 73.0 செ.மீ., மழை பெய்ததால், பெரும் பிரச்னை ஏற்பட்டது.


latest tamil news





வெள்ளப்பெருக்கு



அதாவது, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் சேர்த்து, 59.1 செ.மீ., மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால் ஒரே மாதத்திலேயே 73.0 செ.மீ., பெய்துவிட்டது.இதன் காரணமாகவே ஏரி, குளம், குட்டையில் நீர் ததும்ப இருக்கிறது.

குன்றத்துார் தாலுகாவின் பெரும்பகுதி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வாலாஜாபாத் பகுதியே நாசமானது.வழக்கமாக, ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை, பனிக்காலம், கோடை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என அனைத்து காலங்களையும் சேர்த்து 117 செ.மீ., மழை பெய்யும்.ஆனால் நவம்பர் முடிய, 171 செ.மீ., மழை இப்போதே பதிவாகியுள்ளது. இது 50.8 செ.மீ., கூடுதல்.இயல்பான மழையைவிட மிக அதிகமாக இந்தாண்டு மழை பதிவானதால், மூன்று மாதங்களாகவே, நிலத்தடி நீர் மட்டம், ஓரளவுக்கு உயர்ந்து உள்ளது.


latest tamil news


Advertisement




புதிய வரலாறு



ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர் மட்டம், 2.84 மீட்டராக இருந்த அளவு, நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நவம்பர் மாதம் முடிய 1.18 மீட்டராக பதிவாகிஉள்ளது. கன மழை எதிரொலியாக, வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது ஒருபுறமிருக்க, 2,112 குளம், குட்டைகள், 380 ஊரக வளர்ச்சி துறை ஏரிகள், 381 பொதுப்பணித் துறை ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளில், 90 சதவீதம் நிரம்பி, எங்கு பார்த்தாலும் நீர் ததும்பும் காட்சியாக உள்ளது.கடந்த 2015 நவம்பர் மாதத்தில் மட்டும், 84.8 செ.மீ., பெய்து வரலாறு படைத்தது.அந்த பெருமழைக்கு சற்று குறைவாக இந்தாண்டு நவம்பர் மாதம் பதிவாகியுள்ளது..


latest tamil news




latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202118:41:23 IST Report Abuse
Bhaskaran Thaneer laarikaarargaluku kondaattamthaannu sollunga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X