பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் அனுமதிக்க கூடாது: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 'செக்'

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோவை: கோவை, பெரியநாக்கன்பாளையம் வட்டாரத்தில், 13 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில், பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை என, சுகாதாரத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி,


கோவை: கோவை, பெரியநாக்கன்பாளையம் வட்டாரத்தில், 13 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில், பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை என, சுகாதாரத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.latest tamil news
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் என்ற இலக்கை அடையும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
சுகாதாரத்துறையினரும் வீடு, வீடாக சென்று, தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திவருகின்றனர். இருப்பினும், பலர் இன்னும் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பது தெரியவந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தடுப்பூசி போடாத நபர்களை, பொது இடங்களில் அனுமதிக்கக்கூடாது என, சுகாதார துறை அதிரடியாக அறிவித்துள்ளது.


latest tamil news
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது சுகாதார சட்டம், 1939 பிரிவு, 71 உட்பிரிவு எண்(1)ன் படி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.


13 ஆயிரம் பேர் போடவில்லை!பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறுகையில், "அரசு உத்தரவை தீவிரமாக செயல்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 13 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அவர்களை கண்டறிந்து, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை," என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
08-டிச-202113:44:28 IST Report Abuse
Tamilan விஞ்சான அரசியல் சட்டத்தின் அகங்காரங்களில் ஒன்று
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202118:21:26 IST Report Abuse
Visu Iyerஅவுங்க சொல்கிறபடி தான் நாம வாழ வேண்டுமா?...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202118:22:18 IST Report Abuse
Visu Iyerஅவுங்க சொல்கிறபடி தான் வாழ வேண்டும் என்றால் நாம் அடிமையா...என்று சிந்திக்கதோன்றுகிறதா ...?...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-டிச-202110:05:32 IST Report Abuse
S.Baliah Seer 2018-இல் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய மருத்துவர் ஹோஞ்சோ, கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப் பட்டது என்று சமீபத்தில் அறிவித்தார். இதற்கு WHO-இதுவரை பதிலளிக்கவில்லை. எந்த நாடு அல்லது நாடுகள் இந்த மனித குலத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டது என்று இதுவரை உலக நாடுகள் அறிவிக்கவில்லை. தப்பு செய்தவனை விட்டுவிட்டு சும்மா இருக்கும் மக்களின் உடலில் சுருக்கு சுருக்கு என்று தடுப்பூசி குத்துகிறார்கள். இவனுங்க மேலும் மேலும் புது புது செயற்கை வைரஸ்களை மனிதகுலத்துக்கு எதிராக பரப்பும்போது தடுப்பூசிகளை போட்டுக்கொண்டே இருக்க முடியுமா?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202118:18:11 IST Report Abuse
Visu Iyerதப்பு செய்பவர்களுக்கு தண்டனை கிடையாது.. சட்டத்திற்கு முன் எல்லா மக்களும் சமம்.. அரசியல்வாதிகளை தவிர.. என்று சொல்வது போல இருக்கு உங்கள் கருத்து...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202118:19:31 IST Report Abuse
Visu Iyerமக்களின் உடலில் சுருக்கு சுருக்கு என்று தடுப்பூசி குத்துகிறார்கள்.// இப்போ குத்திக்கிட்டவங்க எல்லோரும் வருடத்திற்கு இரண்டு முறை இனி குத்தணும்னு சொல்ல போறாங்க.. அப்போ என்ன செய்வது என்று கேட்க வருகிறீர்கள் புரிகிறது.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-டிச-202110:01:15 IST Report Abuse
Ramesh Sargam கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் உள்ளது இந்த அறிவிப்பு...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-டிச-202118:20:12 IST Report Abuse
Visu Iyerபார்வையிலில்லாதவர்களை பின் தொடர நாம் எதற்கு கண்களை குருடாக்கி கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள் புரிகிறது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X