பொது செய்தி

இந்தியா

அப்படியே இருக்கு ரெபோ வட்டி விகிதம்: மாற்றவில்லை ரிசர்வ் வங்கி

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை : கொரோனாவின் தாக்கம் குறைந்த சமயத்தில் இப்போது ஓமைக்காரன் எனும் புதிய வகை வைரஸாக உருமாறி பரவி வருவதன் எதிரொலியாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஏற்கனவே உள்ள விகிதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர நிதி நிலைக்கூட்டம் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றமின்றி
RBI, Reporate, Sakthikanthadas,

மும்பை : கொரோனாவின் தாக்கம் குறைந்த சமயத்தில் இப்போது ஓமைக்காரன் எனும் புதிய வகை வைரஸாக உருமாறி பரவி வருவதன் எதிரொலியாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஏற்கனவே உள்ள விகிதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் மாதாந்திர நிதி நிலைக்கூட்டம் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதாக சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. அதன்படி ரெபோ வட்டி விகிதம் 4 சதவீதத்திலும், ரிவர்ச் ரெபோ வட்டி விகிதம் 3.35 சதவீதத்திலும், ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் விகிதம் 18 சதவீதத்திலும் தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தில் நீடிக்கும் என்றும், நான்காம் காலாண்டில் மொத்த விலை பணவீக்கம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 4.35 சதவீதத்தில் இருந்து 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202120:01:04 IST Report Abuse
natesa but union government collecting taxes from petroleum products.
Rate this:
Cancel
08-டிச-202119:32:42 IST Report Abuse
Edwin Jebaraj, Tenkasi ஏன்டா இப்படி ஆளாளுக்கு மக்கள போட்டு கசக்கி புழியிரீங்க. இதற்கு மேல் வட்டிய குறைக்க என்ன இருக்கு. சிறுசேமிப்பிலிருந்து சீனியர் சிட்டிசன் வட்டி வரை ஒன்றுமில்லாமல் செய்தாகிவிட்டது. கார்ப்பரேட் வங்கிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். பாவம் நடுத்தர மக்கள்.
Rate this:
Cancel
08-டிச-202115:18:13 IST Report Abuse
அப்புசாமி பொருளாதாரம் பிச்சிக்கிட்டு எங்கும்.போகலை. வட்டி விகிதத்தை அப்பிடியே வெக்கறதுக்கு ஓமிக்ரான் ஒரு சாக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X