பீஜிங்: சீன தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

மேலும், பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற தம்பதியருக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தியாவசியான வரிகளை தவிர மற்ற வரிகளை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE