சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் இருந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விழுந்து எரிந்தது: ராணுவ அதிகாரி உள்பட 10 பேர் பலி

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஊட்டி: குன்னூர் அருகே, கோவையில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில், ராணுவ அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்ததாக தெரிகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக
குன்னூர்,  ராணுவம், ஹெலிகாப்டர், விபத்து, பலி, உயிரிழப்பு

ஊட்டி: குன்னூர் அருகே, கோவையில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில், ராணுவ அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்ததாக தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில், கோவை ராணுவ மையத்தில் இருந்து குன்னூரில் உள்ள பயிற்சி மையத்திற்கு ஹெலிகாப்டர் கிளம்பியது. அதில் 14 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.


latest tamil news




பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் ராணுவ அதிகாரி உட்பட10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பிபின் ராவத் இறந்ததாக தெரிகிறது.

சம்பவம் தொடர்பாக போலீஸ், விமானப்படை விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-202113:55:41 IST Report Abuse
ரஞ்சித் ராஜன் அதிர்ச்சியான செய்தி
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-டிச-202113:54:50 IST Report Abuse
 N.Purushothaman ஆழ்ந்த இரங்கல்கள் .... முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார் என செய்திகள் வருகிறது ...முழு விவரமும் வர சிறிது கால அவகாசம் தேவைப்படும் ....
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
08-டிச-202113:52:45 IST Report Abuse
S Regurathi Pandian ஆழ்ந்த இரங்கல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X