சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் கோவை மருத்துவமனைகள்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கோவை மருத்துவமனைகளை ராணுவ அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.கோவையில் இருந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு வெல்லிங்டன் ராணுவ
குன்னூர், ஹெலிகாப்டர் விபத்து, மருத்துவமனை,

கோவை: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கோவை மருத்துவமனைகளை ராணுவ அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
கோவையில் இருந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news



இதன் பின்னர்,தொடர் சிகிச்சைக்கு கோவையில் உள்ள மருத்துவமனைகளை மருத்துவ குழுவினர் தயாராக இருக்க ராணுவ மருத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கோவையில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


டாக்டர்கள் விரைவு

கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ., மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூர் செல்கிறது. அதேபோல் இரு மருத்துவமனையிலும் அவசர நிலை கருதி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளன. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒன்று, ஜி.எச்.,குழு ஒன்று விரைகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bandari Lal - Kanpur,இந்தியா
08-டிச-202120:39:10 IST Report Abuse
Bandari Lal ஏன்? பிண பரிசோதனைக்கா?
Rate this:
Cancel
sivan - seyyur,இந்தியா
08-டிச-202116:40:57 IST Report Abuse
sivan கோவை அரசு மருத்துவமனையில் என்ன வசதி உள்ளது?
Rate this:
Bandari Lal - Kanpur,இந்தியா
08-டிச-202120:56:37 IST Report Abuse
Bandari Lalதெரியாதா? எறிஞ்சி கருகி செத்தவனா உயிர் கொடுத்துக்கூற வசதி இருக்கு. கேள்வியா கேக்குறே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X