சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிபிவின் ராவத் மறைவு : தலைவர்கள் இரங்கல்

Updated : டிச 09, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
*துணிச்சல் மிகுந்தவர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. துணிச்சல் மிகுந்த ஒரு மகனை தேசம் இழந்துவிட்டது. தாய்நாட்டிற்காக 40 ஆண்டுகள் அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைபோற்றுதலுக்கு உரியது.ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி *உண்மையான தேச பக்தர்முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள்
முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத், தலைவர்கள்,

*துணிச்சல் மிகுந்தவர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. துணிச்சல் மிகுந்த ஒரு மகனை தேசம் இழந்துவிட்டது. தாய்நாட்டிற்காக 40 ஆண்டுகள் அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை
போற்றுதலுக்கு உரியது.ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

*உண்மையான தேச பக்தர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது கடும் வேதனை அளிக்கிறது. ராணுவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றிய பிபின் ராவத், உண்மையான தேசபக்தர்; சிறந்த ராணுவ வீரர். அவரது மறைவு என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.நரேந்திர மோடி, பிரதமர்

*துணிச்சல் மிகுந்த வீரர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களை இழந்துள்ளோம். இது தேசத்தின் சோகமான நாள். ராணுவத்திற்கான அவரது பங்களிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. துணிச்சல் மிக்க வீரரான அவர், பக்தியுடன் நாட்டிற்கு சேவை செய்தவர். அவரது இழப்பால் வேதனையில் உள்ளேன். அமித் ஷா,மத்திய உள்துறை அமைச்சர், - பா.ஜ.,

*எதிர்பாராத வேதனை


latest tamil news
தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்த எதிர்பாராத சம்பவம் ஆழ்ந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,

*சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியான சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்; எங்கள் எண்ணங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்கும்.ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,

*வார்த்தைகள் இல்லை

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சோகமான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வருத்தத்தை வெளிப்படுத்த, என்னிடம்வார்த்தைகள் இல்லை. மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

*குடும்பத்தினருக்கு இரங்கல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். உயிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்.ஜெகன்மோகன் ரெட்டிஆந்திர முதல்வர்,ஒய்.எஸ்.ஆர்., காங்.,

*கவலையை உருவாக்கியது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் உருவாக்கி உள்ளது. சரண்ஜித் சிங் சன்னிபஞ்சாப் முதல்வர், காங்.,

*தேசம் அதிர்ச்சியில் உள்ளது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தால் தேசம் அதிர்ச்சியில் உள்ளது. பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வர், பா.ஜ.,

*ஈடுசெய்ய முடியாத இழப்பு

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோரின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இது, தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.நவீன் பட்நாயக்ஒடிசா முதல்வர், பிஜு ஜனதா தளம்

*அதிர்ச்சி அடைந்தேன்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், தமிழகத்தில் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் எண்ணமும், வேண்டுதலும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களுடன் இருக்கிறது.சந்திரபாபு நாயுடுதலைவர், தெலுங்கு தேசம்

*வருத்தமாக இருக்கிறது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவியுடன் பயணித்தஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்திமிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. அமரீந்தர் சிங் தலைவர், பஞ்சாப் லோக் காங்.,

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
09-டிச-202107:33:17 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மூர்க்கர்கள் எப்படியெல்லாம் திசை திருப்ப நினைக்கிறார்கள் பாருங்கள்
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
08-டிச-202120:15:51 IST Report Abuse
abibabegum பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என நம்புகிறேன். விரைவில் மீண்டு வருவதற்கு வேண்டி கொள்கிறேன்-காங்கிரஸ் எம்.பி., ராகுல் லூசாயா நீ
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-டிச-202117:57:08 IST Report Abuse
sankaseshan தமிழ்நாடு அரசியல் வியாதிகள் குழப்ப குட்டையில் மீன் பிடிப்பவர்கள் அவர்களின் கருத்த்துக்கள புறம் தள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X