பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் - யார் இவர்?

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல்கள் விவரம்:* ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியிலும், பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார்.* 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ்
இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத்  - யார் இவர்?

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல்கள் விவரம்:

* ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியிலும், பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார்.

* 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார்.


latest tamil news



* மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.


* வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.


* அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

* தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

ராவ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங். எம்.பி., ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bandari Lal - Kanpur,இந்தியா
08-டிச-202120:45:22 IST Report Abuse
Bandari Lal யாரா இருந்து இப்ப என்ன? எப்படி செத்தான் பார் , குடும்பத்தோட கோவிந்தா. என்ன அநியாயம் செஞ்சி இருப்பானோ. சாங்கி கூட்டத்துக்கு சரியான முடிவு.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
08-டிச-202119:04:02 IST Report Abuse
Sivagiri ராணுவத்தில் பிறந்து ராணுவத்தில் படித்து வளர்ந்து ராணுவத்தில் வாழ்ந்து - ராணுவத்திலேயே ஐக்கியமான - தியாகம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாகிய சுத்த வீரன் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X